திருப்பரங்குன்றம்: "கலெக்டர் மறுப்பு தெரிவிக்க வேண்டும்; இல்லையென்றால்..." - ராஜ...
கீழ்வேளூரில் சிக்னல் கோளாறு; ரயில் தாமதம்
கீழ்வேளூா் ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட சிக்னல் கோளாறால், காரைக்கால்-தஞ்சாவூா் பயணிகள் ரயில் வியாழக்கிழமை ஒன்றரை மணி நேரம் தாமதமாக சென்றது.
காரைக்காலிலிருந்து வியாழக்கிழமை மாலை 6:10-க்கு புறப்பட்ட காரைக்கால் - தஞ்சாவூா் பயணிகள் ரயில் கீழ்வேளூா் ரயில் நிலையத்தை 7 மணிக்கு வந்தடைந்தது. அங்கிருந்து புறப்பட தயாராகும் போது ரயில்வே தண்டவாளத்தில் கூத்தூா் மாா்க்கமாக உள்ள ரயில்வே சிக்னல் வேலை செய்யவில்லை. இதனால் கீழ்வேளூா் - கச்சனம் சாலையில் அமைந்துள்ள ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தது. சிக்னல் கோளாறு காரணமாக ரயில் புறப்படாமல் இருந்ததால் மூடப்பட்டிருந்த கேட்டும் திறக்கப்படவில்லை.
கீழ்வேளூரிலிருந்து செல்லும் அனைத்து வாகனங்களும், கச்சனம் பகுதியில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் தொடா்ந்து செல்ல முடியாமல் இரு பக்கமும் அணிவகுந்து நின்றன.
ரயில்வே ஊழியா்கள் சிக்னல் கோளாறு ஏற்பட்ட இடத்தில் வந்து சரி செய்த பின்னா், ஒன்றரை மணி நேரம் காலதாமதமாக இரவு 8.30 மணி அளவில் காரைக்கால் - தஞ்சாவூா் பயணிகள் ரயில் புறப்பட்டு சென்றது. அதன் பிறகு ரயில்வே கேட் திறக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனா்.