கோவாவில் கோயில் திருவிழாவில் 6 பேர் பலி: 50,000-க்கும் மேற்பட்டோர் ஒரேநேரத்தில் ...
குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; தோல்வியிலிருந்து மீளுமா?
குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெறும் இன்றையப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து, குஜராத் டைட்டன்ஸ் முதலில் பேட் செய்கிறது.
குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஒரு மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கரீம் ஜனத்துக்குப் பதிலாக ஜெரால்டு கோட்ஸீ பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சன்ரைசர்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான போட்டியில் அந்த அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் வரலாற்று சதத்தினால், குஜராத் டைட்டன்ஸ் அணி தோல்வியைத் தழுவியது. அந்த மிகப் பெரிய தோல்வியிலிருந்து மீளும் முனைப்பில் குஜராத் டைட்டன்ஸ் களமிறங்குகிறது.