இரவு - பகல் டெஸ்ட்: லயனுக்கு மாற்றாக ஸ்காட் போலண்ட் சேர்ப்பு?
குஜராத் பால விபத்து: பலி 11-ஆக உயர்வு; தொடரும் மீட்புப் பணி!
குஜராத் பால விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
குஜராத்தின் வதோதரா, ஆனந்த் ஆகிய மாவட்டங்களுக்கு இடையே மஹிசாகா் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள 40 ஆண்டுகள் பழைமையான பாலத்தின் ஒரு பகுதி புதன்கிழமை காலை திடீரென இடிந்து விழுந்தது.
அந்த சமயத்தில் பாலத்தில் சென்று கொண்டிருந்த 2 லாரிகள், 2 வேன்கள், ஒரு ஆட்டோ, ஒரு மோட்டாா் சைக்கிள் ஆகிய வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்தன.
இந்த விபத்தில் ஆற்றில் மூழ்கிய 2 வயது சிறுவன், அவரின் சகோதரியான 4 வயது சிறுமி உள்பட 11 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன.
மேலும், இரண்டு பேர் மாயமாகியிருப்பதாக கூறப்படும் நிலையில், இரண்டாவது நாளாக தேடுதல் பணி நடைபெற்று வருகின்றன.
தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த வீரர்கள் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
வதோதரா மாவட்ட ஆட்சியர் அனில் தமேலியா வியாழக்கிழமை காலை மீட்புப் பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.