குஜராத் வீரர் இஷாந்த் சர்மாவுக்கு 25% அபராதம்!
குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் உள்ள ராஜீவ் காந்தி திடலில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் குஜராத் மற்றும் ஹைதராபாத் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடி குஜராத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
இந்தப் போட்டியின் போது ஆட்டத்தின் நடத்தை விதிகளை மீறிய குஜராத் வீரர் இஷாந்த் சர்மாவுக்கு போட்டிக் கட்டணத்திலிருந்து 25 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
இஷாந்த் சர்மா அவர் மீதான லெவல் 1 குற்றத்தை ஒப்புக்கொண்டதால், கள நடுவரின் முடிவே இறுதியானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும், அவருக்கு ஒரு தகுதியிழப்பு புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.
ஐபிஎல்லின் சட்டவிதிகள் 2.2-ன் படி, மைதானத்தில் இருக்கும் பொருள்கள் அல்லது கிரிக்கெட் உபகரணங்களை தேவையின்றி சேதப்படுத்துவதற்கு இந்த அபராதம் விதிக்கப்படுகிறது.
இந்தாண்டு ஐபிஎல் தொடரில் மூன்று போட்டிகளில் விளையாடியிருக்கும் இஷாந்த் சர்மா, 107 ரன்களை விட்டுக்கொடுத்து வெறும் ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தியுள்ளார்.
இதையும் படிக்க: தொடர்ச்சியாக 4 தோல்விகள்; சன்ரைசர்ஸ் ஹைதராபாதின் பயிற்சியாளர் கூறுவதென்ன?