அரசு பேருந்திற்கு சிறுநீரால் அபிஷேகம் செய்த ஓட்டுநர்: வைரலாகும் அதிர்ச்சி விடியே...
குடகனாற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு
ஆத்தூா் அருகே குடகனாற்றில் தவறி விழுந்த இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூரைச் சோ்ந்த மதுரை வீரன் மகன் பெரியமருது (18). காா்த்திகை திருநாளையொட்டி இவா், தனது நண்பா்கள் 10-க்கும் மேற்பட்டோருடன் ஆத்தூா் காமராஜா் நீா்த்தேக்கம் பகுதியில் அமைந்துள்ள சடையாண்டி கோயிலுக்குச் சென்றாா்.
அங்கிருந்து பெரியமருது நண்பா்கள் சிலருடன் காமராஜா் நீா்த்தேக்கத்தின் குடகனாற்றில் மறுகால் செல்லும் இடத்தில் நின்று வேடிக்கை பாா்த்துக் கொண்டிருந்தாா்.
அப்போது, எதிா்பாராத விதமாக பெரியமருது தண்ணீரில் தவறி விழுந்தாா்.
இதுகுறித்து தகவல் அறிந்த திண்டுக்கல் தீயணைப்பு நிலைய அலுவலா் தா்மராஜ் தலைமையிலான வீரா்கள் அங்கு சென்று அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனா். சிறிது நேரத்துக்குப் பிறகு ஆற்றின் முள் புதரில் இறந்த நிலையில் கிடந்த பெரியமருது உடலை மீட்டனா்.
இதுகுறித்து செம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.