”குடமுழுக்கா இல்லை திமுக கட்சிக் கூட்டமா?" - தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரைச் சாடும் பாஜக; பின்னணி என்ன?
தஞ்சாவூர் புன்னை நல்லூர் மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது. தஞ்சாவூர் அரண்மனை தேஸ்வதானம் மற்றும் அறநிலையத்துறை சார்பில் இக்கோயில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோயில் குடமுழுக்கு விழாவானது மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் ஆலோசனைப்படி நடத்தப்பட்டது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-10/kgg7e4d9/e0892f4b_76f4_4a84_a5fd_901ab7a2bcaa.jpg)
குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்வதற்கு அனுமதி அட்டை (பாஸ்) வழங்குவதில் மாவட்ட ஆட்சியர் முறையாக நடந்து கொள்ளவில்லை எனவும் பக்தர்களை முறையாக அனுமதிக்காமல் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாக்கப்பட்டனர் எனவும் பா.ஜ.க-வின் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் கருப்பு முருகானந்தம் கூறியதாவது, "மாரியம்மன் கோயில் திருப்பணிகளுக்கு வசூலிக்கப்பட்ட நன்கொடை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
குடமுழுக்கில் கலந்து கொண்ட பொதுமக்கள் பல்வேறு இடையூறுகளைச் சந்தித்ததாகச் சொல்கிறார்கள். பாஸ் வழங்குவதில் மாவட்ட ஆட்சியர் நடுநிலையுடன் நடந்து கொள்ளவில்லை. லட்சக்கணக்கில் நிதி கொடுத்தவர்களுக்கு முறையாக பாஸ் வழங்காமல் தி.மு.க நிர்வாகிகளுக்கு அதிகமாக வழங்கியிருக்கிறார். இது தொடர்பாகக் கேட்பதற்குப் பல முறை போன் செய்தும் அவர் போனை எடுக்கவில்லை.
கருப்பு கொடி போராட்டம் நடத்துவோம் என்ற பிறகு எங்கள் கட்சிக்குப் பத்து பாஸ் வழங்கினர். ஆட்சியர் பாஸ் வழங்குவதில் திட்டமிடலுடன் செயல்பட்டிருக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் பொதுவானவராக இருக்க வேண்டும். பொதுமக்களுக்கானவராக இருக்க வேண்டும். ஆளும் கட்சிக்காரரைப் போல் இருக்கக் கூடாது. இது என்ன கோயில் குடமுழுக்கா இல்லை தி.மு.க கட்சி கூட்டமா? மாவட்ட ஆட்சியரின் செயல் மேசமான முன்னுதாரணம். எனவே அவருக்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY