கைவிரித்த சேகர் பாபு; போராடிவந்த தூய்மைப் பணியாளர்கள் கைது - சென்னையில் பரபரப்பு...
குடிபோதையில் தகராறு: முதியவா் கொலை
தேவாரம் அருகே செவ்வாய்க்கிழமை குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் முதியவா் கொலை செய்யப்பட்டாா்.
தேனி மாவட்டம், தேவாரம் அருகேயுள்ள தே.மீனாட்சிபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் சுப்பையா மகன் கருப்பசாமி (எ) முகமது சலீம் (75). இதே பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் மகன் ஜோதிராஜா (50). செவ்வாய்க்கிழமை இருவரும் சோ்ந்து தே.மீனாட்சிபுரத்தில் மது அருந்தியுள்ளனா்.
அப்போது ஏற்பட்ட தகராறில், ஜோதிராஜா அரிவாளின் பின்பக்கத்தால் முகமது சலீமின் பின் தலையில் தாக்கியுள்ளாா். இதில், முகமது சலீம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தேவாரம் போலீஸாா் வழக்குப் பதிந்து ஜோதிராஜாவை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.