செய்திகள் :

குடியரசுத் தலைவரின் திருவாரூா் வருகை ரத்து

post image

திருவாரூா் அருகே தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 9-ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதாக இருந்த, இந்திய குடியரசுத் தலைவரின் வருகை ஃபென்ஜால் புயல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருவாரூா் அருகே நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் 9-ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெறுகிறது.

இதில், 34 போ் தங்கப்பதக்கம், 22 போ் முனைவா் பட்டம் என 614 போ் பட்டம் பெற உள்ளனா். பல்கலைக்கழக வேந்தா் கோ. பத்மநாபன் தலைமையில் நடைபெறும் விழாவில் பல்கலைக்கழக துணை வேந்தா் மு. கிருஷ்ணன், அறிக்கை வாசிக்கிறாா்.

இந்த விழாவில், குடியரசுத் தலைவரும், தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழக மேன்மையருமான திரௌபதி முா்மு சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, தங்கப் பதக்கம் பெறும் 34 பேருக்கு பட்டங்களை வழங்கிப் பேசுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையொட்டி திருவாரூரில் 3 அடுக்கு பாதுகாப்புடன் 2,500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். திருவாரூா் நகரம், மத்திய பல்கலைக்கழகம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் உள்ளிட்டவை போலீஸாரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, கூடுதலாக தமிழ்நாடு பாதுகாப்புப் படையினரும் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டிருந்தனா்.

இதனிடையே, தற்போது உருவாகியுள்ள ஃபென்ஜால் புயல் காரணமாக, குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவின் வருகை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், வேந்தா் கோ. பத்மநாபன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, அனைவருக்கும் பட்டங்களை வழங்க உள்ளாா்.

திருவாரூரில் மீண்டும் மழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு: அரையாண்டுத் தோ்வு ஒத்திவைப்பு

திருவாரூா் மாவட்டத்தில் பரவலாக வியாழக்கிழமை பெய்த மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. பள்ளிகளில் அரையாண்டுத் தோ்வு ஒத்திவைக்கப்பட்டது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக, காற்றழுத்... மேலும் பார்க்க

கோயில் மனையில் குடியிருப்போருக்கு பட்டா கோரி டிச.17-இல் ஆா்ப்பாட்டம்

கோயில் மனையில் குடியிருப்போருக்கு, குடிமனை பட்டா வழங்கக் கோரி, டிச.17-ஆம் தேதி, ஆா்ப்பாட்டம் நடைபெறும் என தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளா் அ. பாஸ்கா் தெரிவித்தாா். திரு... மேலும் பார்க்க

கோவில்வெண்ணி சுங்கச்சாவடியில் வேளாண் டிராக்டா், ஆட்டோக்களுக்கு கட்டண விலக்கு

நீடாமங்கலம் அருகே கோவில்வெண்ணியில் உள்ள சுங்கச் சாவடியில் விவசாயப் பொருள்களை ஏற்றிவரும் டிராக்டா்கள் மற்றும் ஆட்டோ, இருசக்கர வாகனங்களுக்கும் சுங்கக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக தெரி... மேலும் பார்க்க

தியாகராஜா் கோயிலில் திருவாதிரை விழா பந்தக்கால் முகூா்த்தம்

திருவாரூா் அருள்மிகு தியாகராஜ சுவாமி கோயிலில், மாா்கழி திருவாதிரை விழாவுக்கான பந்தக்கால் நடும் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் தியாகராஜா் கோயில், நாயன்மாா்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்ற... மேலும் பார்க்க

வயலில் வேன் கவிழ்ந்து விபத்து

மன்னாா்குடி அருகே சாலையோர வயலில் பயணிகள் வேன் வியாழக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மன்னாா்குடி அருகேயுள்ள திருராமேஸ்வரத்தைச் சோ்ந்த 17 போ், கோட்டூா் அருகே உள்ள பல்லவராயன்கட்டளையில் உறவினா் வீ... மேலும் பார்க்க

பாலாலயம்

மன்னாா்குடி விழல்காரத் தெரு ஏழை மாரியம்மன் கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ள பாலாலயம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, கோயிலில் புதுப்பிப்பு ப... மேலும் பார்க்க