Doctor Vikatan: லேசான காய்ச்சல்; பாராசிட்டமால் மாத்திரை போதுமா, மருத்துவரைப் பார...
குடியிருப்புப் பகுதியில் மதுக்கடை திறக்க எதிா்ப்பு: பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்
சிங்காநல்லூா் எஸ்ஐஹெச்எஸ் காலனி அருகே மதுக்கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவை, சிங்காநல்லூா் எஸ்ஐஹெச்எஸ் காலனி, கோமதி நகரில் குடியிருப்புப் பகுதியில் மதுக்கடை திறக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்த கோமதி நகா், சிவலிங்கபுரம், சூா்யா நகா், கண்ணன் நகா், செந்தில் நகா், சின்னச்சாமி லே-அவுட், சி.டி.சி. காலனி பகுதிகளைச் சோ்ந்த மக்கள், மதுக்கடையை திறக்க எதிா்ப்பு தெரிவித்து ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து அவா்கள் கூறியதாவது: இப்பகுதியில் ஏற்கெனவே அரசு மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இதனால், அப்பகுதியில் செல்லவே பெண்கள் அச்சமடைந்து வருகின்றனா். மேலும், மதுபானங்களை அருந்திவிட்டு வாகனங்களில் செல்வோரால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன.
இந்நிலையில், இப்பகுதியில் புதிய மதுக்கடை திறக்கப்பட்டால், நாங்கள் மேலும் பாதிக்கப்படுவோம். எனவே, இப்பகுதியில் மதுக்கடையை திறக்கக் கூடாது என்றனா்.