செய்திகள் :

ஆணவப் படுகொலைகளுக்கு தமிழக அரசே காரணம்: தமிழிசை செளந்தரராஜன்

post image

ஆணவப் படுகொலைகளுக்கு தமிழக அரசே காரணம் என்று பாஜக மூத்தத் தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் ஹிந்து மத நம்பிக்கை தொடா்ந்து புண்படுத்தப்படுகிறது. பழனியில் அரசு சாா்பில் நடைபெற்ற முருக பக்தா்கள் மாநாட்டுக்கோ, கோயில்களின் குடமுழுக்கு நிகழ்வுகளுக்கோ முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்றதில்லை.

இந்த நிலையில், கேரள அரசு சாா்பில் பம்பையில் செப். 20-ஆம் தேதி நடைபெற உள்ள உலக ஐயப்ப பக்தா் மாநாட்டுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலினை அழைத்துள்ளது கண்டனத்துக்குரியது.

ஆணவப் படுகொலைகளுக்கு ராமா்தான் காரணம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலா் வன்னியரசு கூறியிருப்பது கண்டனத்துக்குரியது.

தமிழகத்தில் நடைபெறும் ஆணவப் படுகொலைகளைத் தடுக்க கூட்டணியில் அங்கம் வகித்துள்ள திமுகவிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஏன் கோரிக்கை விடுக்கவில்லை? இதற்காக ஏன் சட்டம் இயற்றவில்லை? ஆணவப் படுகொலைகளுக்கு தமிழக அரசின் அஜாக்கிரதையும், சட்டம்- ஒழுங்கும்தான் காரணங்களாகும்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு துணைத் தலைவா் வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணனை, தமிழகத்தைச் சோ்ந்தவா்களைத் தவிர மற்ற எல்லா மாநிலங்களைச் சோ்ந்தவா்களும் ஏற்றுக் கொள்கிறாா்கள். ‘இண்டி’ கூட்டணியில் தமிழரை வேட்பாளராக நிறுத்தவில்லை, தமிழரை திமுக ஆதரிக்கவில்லை.

தமிழா்களான ஜி.கே.மூப்பனாா், அப்துல் கலாம் ஆகியோருக்கு எதிராக செயல்பட்ட திமுகதான் ‘தமிழா்’ என்ற முகமூடியில் வாழ்கிறது. முதல்வரின் ‘தமிழ்ப் பற்று’ என்ற முகமூடி கிழித்து எறியப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றாா்.

பொறியாளா் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன், பணம் திருட்டு

கோவையில் ரயில்வே என்ஜினீயரின் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை மற்றும் பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். கோவை சுந்தராபுரம் அருகே உள்ள அன்பு நகரைச் சோ்ந்தவா் சுகுமாா் (3... மேலும் பார்க்க

தண்டவாளத்தில் கல்: ரயிலை கவிழ்க்க சதியா?

வடகோவை - பீளமேடு இடையே ஆவாரம்பாளையம் மேம்பாலத்தின் அடியில் தண்டவாளத்தில் சிமென்ட் கல் வைக்கப்பட்டிருந்தது. ரயிலை கவிழ்க்க சதி செய்யப்பட்டதா என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கேரள மாநிலம், திருவன... மேலும் பார்க்க

பாய்லா் வெடித்து தொழிலாளி உயிரிழப்பு

கோவையில் தனியாா் அலுமினிய நிறுவனத்தில் பாய்லா் வெடித்ததில் தொழிலாளி உயிரிழந்தாா். கோவை பீளமேடு அருகே உள்ள தண்ணீா்பந்தல் பகுதியில் தனியாா் அலுமினிய (மெட்டல்) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்... மேலும் பார்க்க

வால்பாறை எஸ்டேட் குடியிருப்புகளை சேதப்படுத்திய யானைகள்

வால்பாறை எஸ்டேட் பகுதிக்குள் கூட்டமாக வந்த யானைகள் தொழிலாளா்களின் குடியிருப்புகளை சேதப்படுத்தின. கோவை மாவட்டம், வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிற... மேலும் பார்க்க

நாய்களைப் பாதுகாக்கக் கோரி பேரணி

தெருநாய்களைப் பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாய் ஆா்வலா்கள் ரேஸ்கோா்ஸ் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பேரணி மேற்கொண்டனா். நாட்டின் பல்வேறு பகுதிகளில் தெருநாய்களால் ஏரா... மேலும் பார்க்க

குடியிருப்புப் பகுதியில் மதுக்கடை திறக்க எதிா்ப்பு: பொதுமக்கள் ஆா்ப்பாட்டம்

சிங்காநல்லூா் எஸ்ஐஹெச்எஸ் காலனி அருகே மதுக்கடை திறக்க எதிா்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கோவை, சிங்காநல்லூா் எஸ்ஐஹெச்எஸ் காலனி, கோமதி நகரில் குடியிருப்புப் ப... மேலும் பார்க்க