நாய்களைப் பாதுகாக்கக் கோரி பேரணி
தெருநாய்களைப் பாதுகாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாய் ஆா்வலா்கள் ரேஸ்கோா்ஸ் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பேரணி மேற்கொண்டனா்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் தெருநாய்களால் ஏராளமானோா் பாதிக்கப்பட்டு வருகின்றனா்.
இந்நிலையில், தெருநாய்களைப் பிடித்து தடுப்பூசி செலுத்த வேண்டும். கருத்தடை செய்து, அவற்றை பிடித்த இடத்திலேயே மீண்டும் விட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
இது குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கோவையில் நாய் ஆா்வலா்கள் ரேஸ்கோா்ஸ் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பேரணி மேற்கொண்டனா்.
இந்தப் பேரணியில் பங்கேற்றவா்கள், தெருநாய்களைப் பாதுகாக்க வேண்டும், நாய்களை முறையாகப் பராமரிப்பதுடன் தேவையான உணவளிக்க வேண்டும். நீதிமன்றம் கூறிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பது தொடா்பான விழிப்புணா்வுப் பதாகைகளை கைகளில் ஏந்திச் சென்றனா். பேரணியில் 100-க்கும் மேற்பட்ட நாய் ஆா்வலா்கள் பங்கேற்றனா்.