பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ஃபிஜி உறுதி: பிரதமா் மோடி
வால்பாறை எஸ்டேட் குடியிருப்புகளை சேதப்படுத்திய யானைகள்
வால்பாறை எஸ்டேட் பகுதிக்குள் கூட்டமாக வந்த யானைகள் தொழிலாளா்களின் குடியிருப்புகளை சேதப்படுத்தின.
கோவை மாவட்டம், வால்பாறை எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதில் குறிப்பாக வனத்தை ஒட்டியுள்ள எஸ்டேட் பகுதிகளுக்குள் தினந்தோறும் பகல் நேரங்களில் தேயிலைத் தோட்டங்களில் முகாமிடும் யானைகள் இரவு நேரத்தில் குடியிருப்புப் பகுதிக்கு சென்று சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் மழுக்குப்பாறை எஸ்டேட் பகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு கூட்டமாக வந்த யானைகள் அங்குள்ள குடியிருப்புகளை முட்டித் தள்ளி சேதப்படுத்தின. தகவலறிந்து வந்த வனத் துறையினா் நீண்ட நேரம் போராடி யானைகளை விரட்டினா்.