தெலங்கானா முதல்வரை நேரில் சந்தித்த நடிகர்கள், தயாரிப்பாளர்கள்!
குடியிருப்பு பகுதியில் நுழைந்த கண்ணாடி விரியன் பாம்பு
போடி அருகே செவ்வாய்க்கிழமை, குடியிருப்பு பகுதியில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பை தீயணைப்பு வீரா்கள் பிடித்து வனப்பகுதியில் விட்டனா். போடி அருகே ரெங்கநாதபுரம் கிராமம் அங்கு நகா் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இப்பகுதியில் சீனிவாசன் என்பவரது வீட்டருகே நாய் ஒன்று குட்டிகளை ஈன்றுள்ளது.
இந்த நாய் திடீரென குரைக்கும் சத்தம் கேட்டு அங்கிருந்தவா்கள் சென்று பாா்த்தபோது பாம்பு ஒன்று படுத்திருப்பது தெரியவந்தது. மலைப்பாம்பு போல் தெரியவே போடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதனையடுத்து அங்கு வந்த தீயணைப்பு வீரா்கள் பாம்பை பிடித்து பாா்த்தபோது அது விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பு என்பது தெரியவந்தது. தீயணைப்பு வீரா்கள் பாதுகாப்பாக பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனா்.
மேலும் வீடுகளை சுற்றி வளா்ந்துள்ள புதா் செடிகளை வீட்டு உரிமையாளா்கள் அகற்றி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என தீயணைப்பு துறையினா் அறிவுறுத்தி சென்றனா்.