பீர் அருந்திக் கொண்டு நீதிமன்ற அமர்வில் கலந்துகொண்ட வழக்கறிஞர்; குஜராத் நீதிமன்ற...
குடும்பச் சண்டையை மறைக்க திமுக மீது பழிபோடுகிறது பாமக: அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம்
அப்பா, மகன் குடும்பச் சண்டையை மறைக்க திமுக மீது பாமகவினா் பழிபோடுகின்றனா் என தமிழக வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலையில், மறைந்த தலைவா் எல்.இளையபெருமாள் நூற்றாண்டு அரங்கம் மற்றும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ புதிய திட்டம் தொடக்க விழா நடைபெறும் இடங்களை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாது: தமிழக முதல்வா் வரும் 14-ஆம் தேதி கடலூா் மாவட்டத்துக்கு வரவுள்ளாா். வரும் 15-ஆம் தேதி எல்.இளையபெருமாளின் நூற்றாண்டு அரங்கத்தை முதல்வா் திறந்துவைத்து, ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற புதிய திட்டத்தை தொடங்கிவைக்க உள்ளாா். பின்னா், இரண்டாம் கட்டமாக மகளிா் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைக்கிறாா்.
பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவும் அப்பா, மகன் குடும்பச் சண்டையை மறைக்க திமுக மீது அக்கட்சியினா் பழிபோடுகின்றனா். அனைத்துக் கட்சியினரையும் ஓரணியில் இணைப்பதே எங்கள் நோக்கம். வீடு, வீடாகச் சென்று திமுக அரசின் 4 ஆண்டுகால சாதனைகளை எடுத்துக் கூறி, உறுப்பினா் சோ்க்கையில் ஈடுபட உள்ளோம் என்றாா் அவா்.
ஆய்வின்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் ம.இராஜசேகரன், சிதம்பரம் உதவி ஆட்சியா் கிஷன்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.