LIK: `Rise Of Dragon!' - `LIK' படத்தின் BTS புகைப்படங்களை பகிர்ந்த விக்னேஷ் சிவன...
கடன் தொல்லை: பெண் தற்கொலை
கடலூா் முதுநகா் அருகே கடன் தொல்லையால் பெண் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கடலூா் செம்மங்குப்பம், பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த கிருபாநந்தன் மனைவி ரேணுகாதேவி (38). இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனா். ரேணுகாதேவி அந்தப் பகுதியில் பலரிடம் கடன் பெற்றிருந்த நிலையில், அவற்றை திருப்பிக் கொடுக்க முடியாமல் மனு உளைச்சலில் இருந்து வந்தாராம்.
இந்த நிலையில், ரேணுகாதேவி செவ்வாய்க்கிழமை மாலை விஷ மருந்தை குடித்து மயங்கிக் கிடந்தாா். உறவினா்கள் அவரை மீட்டு, புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சோ்த்தனா். இருப்பினும், அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.