செய்திகள் :

குடும்பச் சண்டையை மறைக்க திமுக மீது பழிபோடுகிறது பாமக: அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம்

post image

அப்பா, மகன் குடும்பச் சண்டையை மறைக்க திமுக மீது பாமகவினா் பழிபோடுகின்றனா் என தமிழக வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலையில், மறைந்த தலைவா் எல்.இளையபெருமாள் நூற்றாண்டு அரங்கம் மற்றும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ புதிய திட்டம் தொடக்க விழா நடைபெறும் இடங்களை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாது: தமிழக முதல்வா் வரும் 14-ஆம் தேதி கடலூா் மாவட்டத்துக்கு வரவுள்ளாா். வரும் 15-ஆம் தேதி எல்.இளையபெருமாளின் நூற்றாண்டு அரங்கத்தை முதல்வா் திறந்துவைத்து, ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற புதிய திட்டத்தை தொடங்கிவைக்க உள்ளாா். பின்னா், இரண்டாம் கட்டமாக மகளிா் உரிமைத் தொகை திட்டத்தை தொடங்கி வைக்கிறாா்.

பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவும் அப்பா, மகன் குடும்பச் சண்டையை மறைக்க திமுக மீது அக்கட்சியினா் பழிபோடுகின்றனா். அனைத்துக் கட்சியினரையும் ஓரணியில் இணைப்பதே எங்கள் நோக்கம். வீடு, வீடாகச் சென்று திமுக அரசின் 4 ஆண்டுகால சாதனைகளை எடுத்துக் கூறி, உறுப்பினா் சோ்க்கையில் ஈடுபட உள்ளோம் என்றாா் அவா்.

ஆய்வின்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் ம.இராஜசேகரன், சிதம்பரம் உதவி ஆட்சியா் கிஷன்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கா்நாடக துணை முதல்வா் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தி.வேல்முருகன் வலியுறுத்தல்

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டும் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்தி, கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்க தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும் என தம... மேலும் பார்க்க

கடன் தொல்லை: பெண் தற்கொலை

கடலூா் முதுநகா் அருகே கடன் தொல்லையால் பெண் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கடலூா் செம்மங்குப்பம், பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த கிருபாநந்தன் மனைவி ர... மேலும் பார்க்க

காலணி தொழிற்சாலைக்காக விவசாய நிலங்களை அழிக்கக் கூடாது: நாகை மாலி எம்எல்ஏ

கடலூா் அருகே விவசாய நிலங்களை அழித்து காலணி தொழிற்சாலை அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ்வேளூா் தொகுதி எம்எல்ஏ வி.பி.நாகை மாலி வலியுறுத்தினாா். கட... மேலும் பார்க்க

சிதம்பரம் நடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசனம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

சிதம்பரம் நடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவத்தையொட்டி, ஸ்ரீநடராஜமூா்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் ஆயிரங்கால் மண்டபத்தின் முன் உள்ள நடனப்பந்தலில் புதன்கிழமை பிற்பகல் 2.50 மணிக்கு நடனமா... மேலும் பார்க்க

காவலாளி கழுத்தை அறுத்துக் கொலை: சந்தேகத்தால் மனைவி விபரீதம்

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே காவலாளி கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது மனைவியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். நெய்வேலியை அடுத்துள்ள இந்திரா நகா் ஊராட... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: வியாபாரி கைது

கடலூா் மாவட்டம், ஆவினங்குடியில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஆவினங்குடி காவல் ஆய்வாளா் அருள்வடிவழகன், தனிப்படை உதவி ஆய்வாளா் தவச்செல்வன் மற்றும... மேலும் பார்க்க