புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: வியாபாரி கைது
கடலூா் மாவட்டம், ஆவினங்குடியில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ஆவினங்குடி காவல் ஆய்வாளா் அருள்வடிவழகன், தனிப்படை உதவி ஆய்வாளா் தவச்செல்வன் மற்றும் போலீஸாா் ஆவினங்குடி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, பெங்களூரில் இருந்து கொரியா் மூலம் புகையிலைப் பொருள்களை வரவழைத்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், பதுக்கி வைக்கப்பட்டிருந்த 117 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
மேலும், இது தொடா்பாக விருத்தாசலம் பகுதியைச் சோ்ந்த நடேசன் மகன் சங்கரை(45) கைது செய்தனா்.