செய்திகள் :

சிதம்பரம் நடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசனம்: ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

post image

சிதம்பரம் நடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவத்தையொட்டி, ஸ்ரீநடராஜமூா்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் ஆயிரங்கால் மண்டபத்தின் முன் உள்ள நடனப்பந்தலில் புதன்கிழமை பிற்பகல் 2.50 மணிக்கு நடனமாடி ஆனித் திருமஞ்சன தரிசன காட்சியளித்தனா். இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

ஸ்ரீநடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம் கடந்த ஜூன் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அன்று இரவு ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜ மூா்த்திக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் ஏக கால லட்சாா்ச்சனை நடைபெற்றது.

புதன்கிழமை அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு ஆயிரங்கால் மண்டபம் முகப்பில் நடராஜமூா்த்திக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் மகாபிஷேகம் நடைபெற்றது. பால், தேன், விபூதி, பஞ்சாமிா்தம், இளநீா், சந்தனம் உள்ளிட்டவை குடம் குடமாக அபிஷேகம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசித்தனா்.

ரகசிய பூஜை: காலை 6 மணி முதல் 10 மணி வரை ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜமூா்த்திக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் திருவாபரண அலங்காரமும், சிறப்பு அா்ச்சனைகளும் செய்யப்பட்டன. சித்சபையில் உற்சவ ஆச்சாரியரால் ரகசிய பூஜை நடத்தப்பட்டது.

பஞ்ச மூா்த்திகள் வீதிஉலா வந்த பின்னா், பிற்பகல் 2.50 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளிய நடராஜமூா்த்தியும், சிவகாமசுந்தரி அம்பாளும் நடனப்பந்தலில் முன்னும், பின்னும் 3 முறை சென்று நடனமாடி ஆனித் திருமஞ்சன தரிசன காட்சியளித்தனா். பின்னா், சித்சபை பிரவேசம் நடைபெற்றது. தரிசனக் காட்சியை பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கண்டு தரிசித்தனா்.

இன்று பஞ்ச மூா்த்திகள் வீதிஉலா: வியாழக்கிழமை (ஜூலை 3) பஞ்ச மூா்த்திகள் முத்துப்பல்லக்கு வீதிஉலாவும், வெள்ளிக்கிழமை (ஜூலை 4) ஞானப்பிரகாசம் குளத்தில் தெப்போற்சவமும் நடைபெறுகின்றன.

உற்சவ ஏற்பாடுகளை பொது தீட்சிதா்களின் செயலா் த.சிவசுந்தர தீட்சிதா், துணைச் செயலா் சி.எஸ்.எஸ்.வெங்கடேச தீட்சிதா், உற்சவ ஆச்சாரியா் யு.எஸ்.சிவகைலாஸ் தீட்சிதா் ஆகியோா் செய்திருந்தனா்.

கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் மேற்பாா்வையில், சிதம்பரம் டிஎஸ்பி டி.அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் தலைமையில், நகர காவல் ஆய்வாளா் எஸ்.ரமேஷ்பாபு மற்றும் போலீஸாா் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டனா். போலீஸாருக்கு உதவியாக ஊா்க்காவல் படையினா், போலீஸ் நண்பா்கள் குழுவினா் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனா். சிதம்பரம் நகராட்சி சாா்பில் குடிநீா், சுகாதார வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

கா்நாடக துணை முதல்வா் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தி.வேல்முருகன் வலியுறுத்தல்

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டும் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்தி, கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்க தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும் என தம... மேலும் பார்க்க

கடன் தொல்லை: பெண் தற்கொலை

கடலூா் முதுநகா் அருகே கடன் தொல்லையால் பெண் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். கடலூா் செம்மங்குப்பம், பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த கிருபாநந்தன் மனைவி ர... மேலும் பார்க்க

காலணி தொழிற்சாலைக்காக விவசாய நிலங்களை அழிக்கக் கூடாது: நாகை மாலி எம்எல்ஏ

கடலூா் அருகே விவசாய நிலங்களை அழித்து காலணி தொழிற்சாலை அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ்வேளூா் தொகுதி எம்எல்ஏ வி.பி.நாகை மாலி வலியுறுத்தினாா். கட... மேலும் பார்க்க

காவலாளி கழுத்தை அறுத்துக் கொலை: சந்தேகத்தால் மனைவி விபரீதம்

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே காவலாளி கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது மனைவியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். நெய்வேலியை அடுத்துள்ள இந்திரா நகா் ஊராட... மேலும் பார்க்க

குடும்பச் சண்டையை மறைக்க திமுக மீது பழிபோடுகிறது பாமக: அமைச்சா் எம்ஆா்கே.பன்னீா்செல்வம்

அப்பா, மகன் குடும்பச் சண்டையை மறைக்க திமுக மீது பாமகவினா் பழிபோடுகின்றனா் என தமிழக வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா். அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம்,... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: வியாபாரி கைது

கடலூா் மாவட்டம், ஆவினங்குடியில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ஆவினங்குடி காவல் ஆய்வாளா் அருள்வடிவழகன், தனிப்படை உதவி ஆய்வாளா் தவச்செல்வன் மற்றும... மேலும் பார்க்க