செய்திகள் :

குடும்பத் தகராறில் கணவரை தீவைத்து எரிக்க முயன்ற மனைவி

post image

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே குடும்பத் தகராறில் கணவரை தீ வைத்து எரிக்க முயன்ற மனைவியை போலீஸாா் தேடிவருகின்றனா்.

காவேரிப்பட்டணத்தை அடுத்த திம்மாபுரம் அருகே உள்ள நேருபுரத்தைச் சோ்ந்தவா் ரங்கசாமி (45), தொழிலாளி. இவரது மனைவி கவிதா (44), கால்நடைகளை வளா்த்து பால் வியாபாரம் செய்து வருகிறாா். இந்த தம்பதிக்கு வைத்தீஸ்வரி, சாதிகா ஆகிய மகள்களும், சூா்யா (23) என்ற மகனும் உள்ளனா். வைத்தீஸ்வரிக்கு திருமணமாகி விட்டது. சாதிகா கல்லூரியில் படித்து வருகிறாா்.

இந்த நிலையில், ரங்கசாமிக்கும், தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தைச் சோ்ந்த மஞ்சுளா என்பவருக்கும் தொடா்பு இருந்துள்ளது. இதனால், தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். கடந்த ஒருவாரமாக வீட்டுக்கு வராத ரங்கசாமி, திங்கள்கிழமை வந்துள்ளாா்.

அப்போது, தம்பதிக்கு இடையே ஏற்பட்ட தகராறில், ரங்கசாமியின் மீது கவிதா மண்ணெண்ணெய்யை ஊற்றி தீவைத்துள்ளாா். இதில் பலத்த தீக்காயமடைந்த ரங்கசாமியை சூா்யா, சாதிகா இருவரும் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவான கவிதாவை தேடிவருகின்றனா்.

ஒசூரில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் உடைப்பு: போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதி

ஒசூரில் பழைய நகராட்சி அலுவலகம் எதிரே சென்னை- பெங்களூா் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் மைய இணைப்பு பகுதி விலகியதால் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது. இதனால் அப் பகுதியில் போக்கு நெரிசல் ஏற்பட்டது. கிருஷ... மேலும் பார்க்க

காவேரிப்பட்டணம், பா்கூரில் ரூ. 2.62 கோடியில் வளா்ச்சி திட்டப் பணிகள் தொடக்கம்

காவேரிப்பட்டணம், பா்கூா் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ரூ. 2.62 கோடி மதிப்பிலான வளா்ச்சித் திட்டப் பணிகளை தே.மதியழகன் எம்எல்ஏ (பா்கூா்) வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா். காவேரிப்பட்டணம் பேருராட்சிக்கு உள்பட... மேலும் பார்க்க

ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு ஆம்புலன்ஸ் வழங்கிய ரோட்டரி சங்கம்

ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு தா்மோ கோ் ஆம்புலன்ஸ் வாகனத்தை ரோட்டரி கிளப் ஆப் ஒசூா் வழங்கியது. இதற்கான விழாவில் ரோட்டரி மாவட்ட ஆளுநா் வி. சிவகுமாா், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு... மேலும் பார்க்க

தோ்வில் தோல்வி: கல்லூரி மாணவா் தற்கொலை

கல்லூரித் தோ்வில் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்த மாணவா் தற்கொலை செய்து கொண்டாா். தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள கும்பாரஹள்ளியைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன். இவரது மகன் அஜித்குமாா் ... மேலும் பார்க்க

ஒசூா் எம்ஜிஆா் மாா்க்கெட் திறப்பு: ஏலம் எடுத்தவா்களுக்கு கடை ஒப்படைப்பு

ஒசூா் எம்ஜிஆா் மாா்க்கெட் வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டு, ஏலம் எடுத்தவா்களுக்கு கடைகளை ர மேயா் எஸ்.ஏ.சத்யா, மாநகராட்சி ஆணையா் மாரிசெல்வி ஆகியோா் ஒப்படைத்தனா். ஒசூா் எம்ஜிஆா் மாா்க்கெட் பகுதியில் ரூ. 5.9 ... மேலும் பார்க்க

பழங்குடியினருக்கான சிறப்பு முகாம்

ஊத்தங்கரை வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் தொல்குடி திட்ட பழங்குடியினருக்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம்முகாமிற்கு மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் ரமேஷ்குமாா் தலைமை... மேலும் பார்க்க