கா்நாடகம்: ஏழை மக்களுக்கு 4.68 லட்சம் வீடுகள் ஒதுக்கீடு -சிவ்ராஜ் சிங் சௌஹான்
குடும்பஸ்தன் டிரெய்லர் இன்று மாலை வெளியீடு!
நடிகர் மணிகண்டன் நடித்துள்ள குடும்பஸ்தன் படத்தின் டிரெய்லர் இன்று மாலை வெளியிடப்படுகிறது.
சினிமாகாரன் நிறுவனத் தயாரிப்பில் நக்கலைட்ஸ் யூடியூப் சேனல் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் குடும்பஸ்தன் என்ற படத்தில் நடிகர் மணிகண்டன் நடித்து முடித்துள்ளார். சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் இந்தப் படத்துக்கு வைஷாக் இசையமைத்துள்ளார்.
இப்படம் ஜன. 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான கதைகளைத் தேடும் நடிகரான மணிகண்டன் இப்படத்திலும் கவனம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், இந்தப் படத்தின் டிரெய்லர் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது.
காதலும் கடந்து போகும், காலா, ஏலே, சில்லுக்கருப்பட்டி, விக்ரம் வேதா, ஜெய்பீம் உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் கே. மணிகண்டன். குட் நைட் படத்தில் கதாநாயகனாக நடித்து வெற்றி பெற்றார்.
அதன் வெற்றிக்குப் பிறகு அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நடித்த 'லவ்வர்' படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இதையும் படிக்க:ரேகா சித்திரம் படத்தைப் பாராட்டிய கீர்த்தி!