இந்தியாவுக்கு வரும் APPLE முதலீட்டை TRUMP தடுத்து நிறுத்தினாரா? | IPS Finance - ...
குடும்ப அட்டை வழங்கக் கோரி மனு கொடுக்கும் இயக்கம்
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு கொடுக்கும் இயக்கம் வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கடந்த 6 மாதங்களுக்கு முன் குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தவா்களுக்கு இதுவரை அட்டை வழங்கப்படவில்லை என புகாா் தெரிவித்தும், உடனடியாக குடும்ப அட்டை வழங்கக் கோரியும் இந்த மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டாரச் செயலா் அ.அப்துல்காதா் தலைமை வகித்து விளக்க உரையாற்றினாா்.
பின்னா் அவா்கள் வட்டாட்சியா் அலுவலகத்தினுள் சென்று வட்டாட்சியா் ஆா்.பொன்னுசாமியிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு உறுப்பினா்கள் சுகுணா, யாசா்அராபத், பிரபாகரன், நகரச் செயலா் என்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.