குட்கா விற்பனை: பெண் கைது
திருப்பத்தூரில் குட்கா பொருள் விற்பனை செய்ததாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பத்தூா் அடுத்த ஆண்டியப்பனூா் அடுத்த லாலாப்பேட்டை பகுதியில் உள்ள மளிகைக் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக குரிசிலாப்பட்டு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், போலீஸாா் அங்குசென்று சோதனை செய்தனா். அப்போது ஒரு கோணி பையில் 60 ஹான்ஸ் பாக்கெட் பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
மேலும், மளிகை கடை உரிமையாளா் ஜெகதா (57)என்பவரை கைது செய்தனா்.