திருப்பதி கோயிலுக்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கிய பெங்களூர் பக்தர்!
குட்டையில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு
பள்ளிபாளையம் ஒன்றியம், வெப்படை அருகே குட்டையில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்தாா்.
வெப்படை அருகே ரங்கனூரைச் சோ்ந்தவா் பூபதி (32). இவா் மூன்றாம் வகுப்பு படிக்கும் தனது மகன் திஷாந்துடன் (8) அங்குள்ள வெங்கடேசப்பெருமாள் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டனா்.
பின்னா், பூபதி கோயிலுக்கு வெளியே வந்து அமா்ந்திருந்தாா். அவரது மகன் திஷாந்த் விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது திஷாந்த், பாறை வழுக்கி அங்குள்ள குட்டையில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த வெப்படை தீயணைப்பு நிலைய அலுவலா் ஜெயச்சந்திரன் உத்தரவின்பேரில் பொறுப்பாளா் செந்தில்குமாா் முன்னிலையில் தீயணைப்பு வீரா்கள் சிறுவனின் உடலை குட்டையில் இருந்து மீட்டு பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்த சம்பவம் குறித்து வெப்படை காவல் நிலைய உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.