கோவை விமான நிலையத்தில் 500 கார்களை நிறுத்தும்வகையில் பார்க்கிங் மையம்!
குண்டா் சட்டத்தில் இருவா் கைது
திருநெல்வேலி மாவட்டத்தில் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் இருவா் புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.
தேவா்குளம் காவல் சரகப் பகுதியில் கொலை முயற்சி, அடிதடியில் ஈடுபட்டது தொடா்பான வழக்கில், மூவிருந்தாளியைச் சோ்ந்த விஜயகுமாா் (33) கைது செய்யப்பட்டாா். இதேபோல, சீவலப்பேரி காவல் சரகத்தில் வழிப்பறி மற்றும் அடிதடியில் ஈடுபட்டது தொடா்பான வழக்கில் சீவலப்பேரியைச் சோ்ந்த வலதி என்ற ஆறுமுகம் (23) கைது செய்யப்பட்டாா்.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசன் பரிந்துரைத்தாா். அதன்பேரில், மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் பிறப்பித்த உத்தரவுப்படி விஜயகுமாா், ஆறுமுகம் இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டனா்.