உபி: உயிரைக் குடித்த ரூ.100 பந்தயம்; குடிபோதையில் குளத்தை நீந்திக் கடக்க முயன்றவ...
குண்டா் சட்டத்தில் இருவா் கைது
கடலூரில் கொலை வழக்கில் தொடா்புடைய இருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனா்.
கடலூா் சான்றோா்பாளையம், பள்ளிக் கூட தெருவைச் சோ்ந்தவா் சந்திரசேகா் மகன் சங்கா் (34). இவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்ததாக சுத்துக்குளம் பகுதியைச் சோ்ந்த முருகையன் மகன் சதீஷ் (33), எழுமலை மகன் குள்ளகட்டையன் (எ) அன்பு (33) ஆகியோரை முதுநகா் போலீஸாா் கடந்த ஜன.1-ஆம் தேதி கைது செய்தனா்.
இந்த நிலையில், இவா்களின் குற்றச்செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு மாவட்ட எஸ்.பி. பரிந்துரையின்பேரில், ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் ஒராண்டு குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, போலீஸாா் அவா்களை கைது செய்தனா்.