சத்தீஸ்கரில்.. ரூ.8 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்ட நக்சல் கைது!
குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது
திருட்டு வழக்கில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் புதன்கிழமை சிறையில் அடைத்தனா்.
திருப்பூா் மாநகரம், அனுப்பா்பாளையம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட திருட்டு வழக்கில் விஜய் (32) என்பவரை போலீஸாா் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட விஜயை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும் என போலீஸாா் பரிந்துரைத்தனா்.
இதையடுத்து, விஜயை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையா் ராஜேந்திரன் புதன்கிழமை உத்தரவிட்டாா்.
இந்த உத்தரவுக்கான நகலை சிறையில் உள்ள விஜயிடம் போலீஸாா் வழங்கினா்.