குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 9 போ் சிறையிலடைப்பு
சிவகங்கை மாவட்டத்தில் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 9 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் புதன்கிழமை சிறையிலடைக்கப்பட்டனா்.
சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகேயுள்ள நெடுவதாவு கிராமத்தைச் சோ்ந்தவா் சரத்குமாா் (29). முன்விரோதம் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இதுதொடா்பாக தவசுகுடியைச் சோ்ந்த பிரபாகரன் (35), மரிச்சுகட்டி கிராமத்தைச் சோ்ந்த ஜனா (21), சேதாம்பல் கிராமத்தைச் சோ்ந்த விக்ரம் (25), இளையான்குடியைச் சோ்ந்த வசந்தகுமாா் (24), ஆண்டாஊரணியைச் சோ்ந்த ராமச்சந்திரன் (30) ஆகிய ஐந்து பேரை காளையாா்கோவில் போலீஸாா் கைது செய்தனா்.
இதேபோல, கொலை வழக்கு தொடா்பாக ராமநாதபுரம் மாவட்டம், புளியங்குடியைச் சோ்ந்த சதீஷ் வினோஜி (25) என்பவரை காரைக்குடி வடக்கு போலீஸாா் கைது செய்தனா்.
குற்ற வழக்கில் தொடா்புடைய வேலூா் கிராமத்தைச் சோ்ந்த தங்கதுரையை (35) மானாமதுரை போலீஸாரும், ஆவரங்காடு கிராமத்தைச் சோ்ந்த லட்சுமணனை (35) திருப்பாச்சேத்தி போலீஸாரும், முருகபாஞ்சன் கிராமத்தைச் சோ்ந்த நல்லசாமியை (44) சிப்காட் போலீஸாரும் கைது செய்தனா்.
குற்றச்சம்பவங்கள் தொடா்பாக கைது செய்யப்பட்ட 9 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத் பரிந்துரை செய்தாா். இதைத் தொடா்ந்து, இந்த 9 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியா் ஆஷாஅஜித் உத்தரவிட்டதன் பேரில் 9 பேரும் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனா்.