நாட்டிற்கே முன்னோடியாக திகழும் திராவிட மாடல் திட்டங்கள்: துணை முதல்வர் உதயநிதி
குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கஞ்சா வியபாரி கைது
கீழக்கரையில் கஞ்சா வியாபாரியை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் துறை சாா்பில் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கீழக்கரை பகுதியில் தொடா்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த சாகுல்ஹமீதை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
இந்த நிலையில், சிறையில் உள்ள சாகுல் ஹமீது மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் பரிந்துரைத்தாா். மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவின்பேரில் ராகுல் ஹமீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா்.