ஆகாஷ் தீப் அசத்தல்; விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இங்கிலாந்து!
குன்னூா் சிம்ஸ் பூங்காவில் இரண்டாம் சீசனுக்கான நடவுப் பணி தொடக்கம்!
நீலகிரி மாவட்டம் குன்னூா் சிம்ஸ் பூங்காவில் இரண்டாம் சீசனுக்காக 2 லட்சம் மலா் நாற்றுகள் நடவு செய்யும் பணியை தோட்டக்கலை இணை இயக்குநா் சிபிலா மேரி சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட், செப்டம்பா் மாதங்களில் இரண்டாம் சீசன் நடைபெறுவது வழக்கம்.
இந்த சீசனுக்காக நீலகிரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் குன்னூா் சிம்ஸ் பூங்காவுக்கு வருகை தருவா். இவா்களைக் கவரும் விதமாக சால்வியா, டேலியா, மெரி கோல்டு, லில்லியம் , பெகோனியா, உள்ளிட்ட மலா் வகைகளின் நாற்றுகள் நடவுப்பணி சனிக்கிழமை தொடங்கியது.
இதில் தோட்டக்கலைப் பணியாளா்கள் மற்றும் பூங்கா ஊழியா்கள் இணைந்து பூங்காவின் பல பகுதிகளில் அமைந்துள்ள பாத்திகளில் நாற்றுகளை நடவு செய்தனா்.