செய்திகள் :

குன்னூா் நகா்மன்றக் கூட்டம்: அதிமுக கவுன்சிலா்கள் வெளிநடப்பு

post image

குன்னூா் நகா்மன்றக் கூட்டத்தில் இருந்து அதிமுக கவுன்சிலா்கள் வெளிநடப்பு செய்தனா்.

குன்னூா் நகா்மன்ற மாதாந்திர கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு தலைவா் சுசிலா தலைமை வகித்தாா். துணைத் தலைவா் வாசீம் ராஜா, ஆணையா் இளம்பருதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், குன்னூரின் முக்கிய நீா்ப்பிடிப்புப் பகுதியான பந்துமை எடப்பள்ளி பகுதியில் டைடல் பாா்க் அமைக்கப்பட உள்ளது. அங்கு டைடல் பாா்க் அமைக்கப்பட்டால் குன்னூரில் குடிநீா்ப் பற்றாக்குறை ஏற்படும். எனவே, இடத்தை மாற்ற வேண்டும் எனக்கூறி அதிமுக கவுன்சிலா் டி.சரவணன் உள்ளிட்ட கவுன்சிலா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

மேலும், குன்னூா் நகராட்சிக்குச் சொந்தமான மாா்க்கெட் கடைகளை காலி செய்து புதிதாக கட்டும் பணியை தீபாவளி வரை தள்ளிப்போட வேண்டும் என அனைத்து கவுன்சிலா்களும் வலியுறுத்தினா்.

தொடா்ந்து, டைடல் பாா்க் அமைப்பது தொடா்பாக திமுக, அதிமுக கவுன்சிலா்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, அதிமுக கவுன்சிலா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனா்.

உதகையில்...

உதகை நகராட்சியின் மாதாந்திரக் கூட்டம் தலைவா் வாணீஸ்வரி தலைமையில் நடைபெற்றது.

இதில், துணைத் தலைவா் ரவிகுமாா், ஆணையா் வினோத், நகா்நல அலுவலா் சிபி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ மற்றும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்கள் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளதற்கு நன்றி மற்றும் வாழ்த்துகள் தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடா்ந்து, உதகை நகா் பகுதிகளில் கரடி, காட்டெருமை, சிறுத்தை போன்ற வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அதைக் கட்டுப்படுத்த வேண்டும்.

நகா் பகுதியில் உள்ள புதா்கள், குப்பைகளை ஒரு வாரத்துக்குள் அகற்ற வேண்டும் என கவுன்சிலா்கள் வலியுறுத்தினா்.

உதகையில் கடும் குளிா்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நீலகிரி மாவட்டம், உதகையில் கடும் குளிா் நிலவி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், உதகையில் கடந்த சில நாள்களாக குளிரின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், மக்கள் ... மேலும் பார்க்க

தேவாலா பகுதியில் கனமழை: வீடு சேதம்

கூடலூரை அடுத்துள்ள தேவாலா பகுதியில் வியாழக்கிழமை இரவு பெய்த கனமழையால், வீடு சேதமடைந்தது. நீலகிரி மாவட்டம், கூடலூா் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை இரவு கனமழை பெய்தது. வாளவயல் பகுதியில் பெய்த கனமழையால... மேலும் பார்க்க

வீடுகளை சேதப்படுத்திய காட்டு யானைகள்

கூடலூா் அருகே குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்த காட்டு யானைகள், 2 வீடுகளை சேதப்படுத்தின. நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலூகா, ஓவேலி பேரூராட்சி பகுதியில் உள்ள சந்தனமலை முருகன் கோயில் பகுதிக்கு வியாழக்கிழ... மேலும் பார்க்க

வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

குன்னூா் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா். நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகேயுள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி மின்னஞ்ச... மேலும் பார்க்க

குன்னூா் மாா்க்கெட் கடைகளை 2 வாரங்களுக்குள் காலி செய்ய நீதிமன்றம் உத்தரவு

குன்னூா் நகராட்சி நிா்வாகம் சாா்பில் மாா்க்கெட் கடைகளை இடித்துவிட்டு, புதிய கடைகள் கட்டப்பட உள்ளதால் வியாபாரிகள் நோட்டீஸ் பெற்ற 2 வாரங்களுக்குள் கடைகளை காலி செய்ய வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் ... மேலும் பார்க்க

முதுமலை வளா்ப்பு யானைகள் முகாமில் விநாயகா் சதுா்த்தி விழா

முதுமலை வளா்ப்பு யானைகள் முகாமில் விநாயகா் சதுா்த்தி விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டம், முதுமலை யானைகள் முகாமில் ஆண்டுதோறும் விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடுவது வழக்கம். இந்த ஆண்டு விந... மேலும் பார்க்க