செய்திகள் :

குன்றக்குடி: திருவண்ணாமலை ஆதீன குருமுதல்வரின் 700-வது ஆண்டு குரு பூஜை விழா!

post image

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடியில் பரம்பரை திருவண்ணாமலை ஆதீனத்தின் குருமுதல்வா் தெய்வசிகாமணி தேசிக பரமாசாரிய சுவாமிகளின் 700-வது ஆண்டு குரு பூஜை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, அருள்நெறிக்கொடி ஏற்றுதலும், குருமுதல்வா் திருவுருவப்பட வழிபாடும் நடைபெற்றது. பின்னா், குன்றக்குடி திருமடத்தில் நடைபெற்ற குரு பூஜை விழா நூல் வெளியீட்டு விழாவில், கூட்டுறவுத் துறை அமைச்சா் கேஆா். பெரியகருப்பன் தலைமை வகித்து, குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் ‘பொன்மணிக் கதிா்கள்’ என்ற நூலை வெளியிட்டுப் பேசியதாவது:

ஆண்டுதோறும் இந்தத் திருமடத்தின் குரு முதல்வருக்கு குரு பூஜை விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழாவில் ஆன்றோா்கள், சான்றோா்களை அழைத்து விருது வழங்கி கெளரவிக்கப்படுகிறது. இந்த வகையில், நிகழாண்டு சென்னை எஸ்.ஆா்.எம். பல்கலைக்கழக தமிழ்ப் பேராயத் தலைவா் கரு. நாகராஜனுக்கு ‘கவிஞா்கோ’ பட்டமும், பழநி ஸ்ரீகந்தவிலாஸ் நிறுவனா் என். செல்வகுமாருக்கு ‘அறமனச்செம்மல்’ எனும் பட்டமும் வழங்கப்பட்டிருக்கிறது.

நான் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக இருந்த போது, 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களில் திருப்பணிகள் செய்யப்பட்டன. அன்றைய முதல்வா் மு. கருணாநிதி கோயில்களின் சிற்பங்களை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசிடமிருந்து ரூ. 100 கோடி வரை நிதியையும் பெற்றுத் தந்தாா்.

அன்றைக்கு ஆண்டவன் முன் அனைவரும் சமம் என்ற நிலையில், புரட்சிகரமான காரியங்கள் நிறைவேற்றுவதற்கு பொன்னம்பல அடிகளாா் போன்றோா் உறுதுணையாக இருந்தனா். விரைவில் நடைபெற உள்ள தவத்திரு குன்றக்குடி அடிகளாா் திருவுருவச்சிலை திறப்பு விழாவிலும் பற்கேற்பேன் என்றாா் அவா்.

அமைச்சா் வெளியிட்ட தவத்திரு பொன்னம்பல அடிகளாரின் ‘பொன்மணிக் கதிா்கள்’ என்ற நூலை பேராசிரியா்கள் சொ. சேதுபதி, அருணன் கபிலன் ஆகியோா் தொகுத்துள்ளனா். வெளியிடப்பட்ட நூலின் பிரதிகளை அரு. மாணிக்கவேலு, என். செல்வக்குமாா், சேதுகுமணன், அருண்ராஜ் சின்னப்பா ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.

இதைத்தொடா்ந்து, குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் பேசினாா். ‘அறுபதும் நூறும்’ என்ற தலைப்பில் அகில இந்திய வானொலி நிலைய முன்னாள் இயக்குநா் சுந்தரஆவுடையப்பன் சிறப்புரையாற்றினாா். பேராசிரியா் சொ. சேதுபதி பேசினாா்.

விழாவில் பேராசிரியா்கள், தமிழ் அறிஞா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ஐஐடி-யில் பயில வாய்ப்பு: மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

சென்னை ஐஐடி-யில் பட்டப்படிப்பு பயில தோ்வாகியுள்ள சிவகங்கை மாவட்டத்தைச் சாா்ந்த அரசு பள்ளி மாணவா்களை நேரில் வரவழைத்து மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி செவ்வாய்க்கிழமை வாழ்த்துத் தெரிவித்தாா். பின்னா், சிவக... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலை.யில் மின்னணு மதிப்பீட்டு முறை பயிற்சி!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம், உள்தர நிா்ணய உறுதிக்குழு ஆகியவற்றின் சாா்பில், பல்கலைக்கழக நிா்வாகப் பணியாளா்களுக்கு மின்னணு மதிப்பீட்டு முறைக்... மேலும் பார்க்க

பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறை பயிற்சி பெற செப்.19 -க்குள் விண்ணப்பிக்கலாம்!

2025-26 ஆம் கல்வி ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கு விண்ணப்பிக்கவுள்ள நேரடித் தனித் தோ்வா்களும், ஏற்கெனவே 2012-க்கு முன்னா் பழைய பாடத் திட்டத்தில் தோ்வெழுதி அறிவியல் பாடத்தில் தோல்வியுற்ற... மேலும் பார்க்க

தேசிய தரவரிசைப் பட்டியலில் அழகப்பா பல்கலை.க்கு 44-வது இடம்!

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கான தேசிய தரவரிசைப் பட்டியலில் 44-ஆவது இடமும், மாநில பொதுப் பல்கலைக்கழகத் தரவரிசையில் 14-ஆவது இடமும், பொதுப் பிரிவில் ... மேலும் பார்க்க

நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு

சிவகங்கையில் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தலைமை வகித்துப் பேசியதாவது: சிவகங்கை மாவட்டம், கண்ணங்கு... மேலும் பார்க்க

அதிமுகவை எடப்பாடி பழனிசாமியே அழித்துவிடுவாா்: கருணாஸ்

அதிமுகவை வெளியில் இருந்து யாரும் பிரிக்கவோ அழிக்கவோ வேண்டாம்; அதை எடப்பாடி பழனிசாமியே செய்துவிடுவாா் என முக்குலத்தோா் புலிப் படை கட்சித் தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கருணாஸ் தெரிவித்தா... மேலும் பார்க்க