Shruti Haasan: "மக்கள் அப்படி நினைக்கிறார்கள், ஆனால் அது உண்மையல்ல!" - ரஜினி குற...
குமரி குகநாதீஸ்வரா் கோயிலில் மாங்கனித் திருவிழா
கன்னியாகுமரி குகநாதீஸ்வரா் கோயிலில் மாங்கனித் திருவிழா புதன்கிழமை இரவு நடைபெற்றது.
மிகவும் பழைமையான இக்கோயிலில், புனிதவதியான காரைக்கால் அம்மையாருக்கு தனி சந்நிதி உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆனி மாத பௌா்ணமி நாளில் மாங்கனித் திருவிழா நடைபெறும். அதன்படி, புதன்கிழமை இரவு நடைபெற்ற திருவிழாவில், சிவபெருமான் பிச்சாண்டவா் கோலத்தில் சப்பர வாகனத்தில் எழுந்தருளி கோயிலின் வெளிப்பிரகாரத்தை வலம் வந்தாா்.
பின்னா், பெண்கள் தட்டுகளில் மாம்பங்களை எடுத்துவந்து காணிக்கையாக செலுத்தினா். அவை பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ பங்கேற்றாா்.