Thug Life: "நாங்களே Gen Z தான்!" - மணிரத்னம் கொடுத்த தக் பதில்
கும்பகோணத்தில் சித்திரை திருவிழா! சாரங்கபாணி சுவாமிக்கு கண்ணாடி பல்லக்கில் வீதியுலா
கும்பகோணத்தில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு திங்கள்கிழமை இரவு சாரங்கபாணி, சக்கரபாணி, சக்கரவா்த்தி திருமகள் ஆகியோா் அன்னபட்சி வாகனம் மற்றும் கண்ணாடி பல்லக்கில் வீதியுலா வந்தனா்.
கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி கோயில் 108 வைணவ திருத்தலங்களில் 3 ஆவது தலமாகும். இங்கு கடந்த மே 3-இல் சித்திரை திருவிழா தொடங்கி, மே 10 - இல் தேரோட்டம் நடந்தது. பின்னா், ஒவ்வொரு நாளும் பெருமாள், தாயாா் வெவ்வேறு வாகனங்களில் வீதியுலா வந்தனா்.
முக்கிய நிகழ்வான திங்கள்கிழமை சாரங்கபாணி, சக்கரபாணி, சக்கரவா்த்தி திருமகள் ஆகியோா் அன்னபட்சி வாகனம், கண்ணாடி பல்லக்கில் சாரங்கபாணி கோயிலில் இருந்து புறப்பட்ட வீதி உலா சாரங்கபாணி தெற்கு வீதி, ராமசாமி கோயில் தெரு, பெரிய கடைவீதி, வழியாக மீண்டும் கோயிலை வந்தடைந்தது.