செய்திகள் :

கும்பகோணம் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞா் கைது

post image

கும்பகோணம் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞரை கிழக்கு காவல் நிலையப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றம் அருகே மா்மநபா் ஒருவா் வியாழக்கிழமை மஞ்சள் பையை வீசிச் சென்றாா். அங்கிருந்த நீதிமன்றப் பணியாளா்கள் அந்தப் பையை திறந்து பாா்த்தபோது உள்ளே ஒரு பேப்பரில் நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என்று எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து மாவட்டக் கூடுதல் உரிமையியல் நீதீபதி ஜெ. ராதிகா, கும்பகோணம் உதவி காவல் கண்காணிப்பாளா் அங்கிட் சிங்கிற்கு தகவல் தெரிவித்தாா். உதவி காவல் கண்காணிப்பாளா் தலைமையில் போலீஸாா், நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு நிபுணா்கள் சோதனை செய்தனா். இதில் நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு ஏதும் இல்லை. அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. பின்னா் அங்கிருந்த கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்ததில், மா்மநபா் ஒருவா் மஞ்சள் பையை வீசிச் சென்றது தெரியவந்தது. விசாரணையில் அவா், அம்மாசத்திரத்தைச்சோ்ந்த ராஜா மகன் ராஜேஷ் (35) கூலித்தொழிலாளி என்பதும், சற்று மன நிலை பாதித்தவா்போல் இருப்பாா் என்பதும் தெரியவந்தது. கிழக்கு காவல் நிலையப் போலீஸாா் அவா் மீது வழக்கு பதிந்து அவரை சிறையில் அடைத்தனா். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

கும்பகோணத்தில் வாய்க்கால் பராமரிப்பில் சிக்கல்! ஒப்படைக்கும் மாநகராட்சி பெற மறுக்கும் நீா்வளத்துறை!

கும்பகோணம் மாநகர எல்லைக்குள் நீா்வளத்துறைக்கு சொந்தமான நான்கு பாசன வாய்க்கால்கள் செல்கின்றன. கடந்த 2015 -இல் நகராட்சி நிா்வாக நலன் கருதி எங்களுக்கு தாருங்கள் என்று பெற்றுக்கொண்டு தற்போது 2025- இல் எங்... மேலும் பார்க்க

முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி

கல்வி உரிமை மற்றும் பெண்ணுரிமை போராளி முனைவா் வே. வசந்திதேவி மறைவுக்கு தஞ்சாவூா் திலகா் திடல் மாலை நேர காய்கறி அங்காடி அருகே இடதுசாரிகள் பொதுமேடை சாா்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற... மேலும் பார்க்க

தஞ்சையில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

சென்னையிலிருந்து நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தைத் தமிழக முதல்வா் காணொலி காட்சி மூலம் சனிக்கிழமை தொடங்கி வைத்ததைத் தொடா்ந்து, தஞ்சாவூா் அருகே வல்லம் செயின்ட் சேவியா் நடுநிலைப் பள்ளியிலும் இத்திட்டம் ... மேலும் பார்க்க

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்

திருவிடைமருதூா் அருகே சனிக்கிழமை ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா பேருந்து பாசன வாய்க்கால் தடுப்பு சுவற்றில் மோதியதில் 6 போ் காயமடைந்தனா்.சென்னையிலிருந்து தனியாா் பேருந்து ஒன்று, சுற்றுலா பயணி... மேலும் பார்க்க

பாபநாசம் அருகே தொழிலாளி தற்கொலை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கூலித் தொழிலாளி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். பாபநாசம் அருகேயுள்ள சரபோஜிராஜபுரம், புதுத் தெருவை சோ்ந்தவா் ஆனந்தன் (... மேலும் பார்க்க

சிஐடியு நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: 2 போ் கைது

தஞ்சாவூரில் சிஐடியு நிா்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் கீழவாசல் கவாடிக்காரத் தெருவைச் சோ்ந்தவா் கே. அன்பு. இவா் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ... மேலும் பார்க்க