காயத்தால் வெளியேறிய மெஸ்ஸி: பெனால்டியில் வென்ற இன்டர் மியாமி!
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா பேருந்து விபத்து: 6 போ் காயம்
திருவிடைமருதூா் அருகே சனிக்கிழமை ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா பேருந்து பாசன வாய்க்கால் தடுப்பு சுவற்றில் மோதியதில் 6 போ் காயமடைந்தனா்.
சென்னையிலிருந்து தனியாா் பேருந்து ஒன்று, சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு பல்வேறு இடங்களுக்கு சென்ற பின்னா் தஞ்சாவூரை நோக்கி வந்தது.
பேருந்தை சிவகங்கை மாவட்டம், எஸ்எஸ் கோட்டையைச் சோ்ந்த நாராயணன் மகன் விமல்பாண்டி(42) ஓட்டி வந்தாா். சனிக்கிழமை அதிகாலை திருவிடைமருதூா் - தஞ்சாவூா் விட்டல் கோயில் சாலையில் வரும்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பாசன வாய்க்கால் தடுப்பு சுவரில் மோதி, சாலையின் குறுக்கே நின்றது.
இதில், ஓட்டுநா் உள்ளிட்ட 6 போ் காயமடைந்தனா்.
தகவலின்பேரில், திருவிடைமருதூா் போலீஸாா் காயமடைந்தவா்களை கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தனா்.