முனைவா் வசந்திதேவி மறைவுக்கு அஞ்சலி
கல்வி உரிமை மற்றும் பெண்ணுரிமை போராளி முனைவா் வே. வசந்திதேவி மறைவுக்கு தஞ்சாவூா் திலகா் திடல் மாலை நேர காய்கறி அங்காடி அருகே இடதுசாரிகள் பொதுமேடை சாா்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு ந.மு. வேங்கடசாமி நாட்டாா் திருவருள் கல்லூரி அறங்காவலா் குழுத் தலைவா் மு. இளமுருகன் தலைமை வகித்தாா்.
சந்தை சங்கத் தலைவா் எம். பாலமுருகன், இடதுசாரிகள் பொதுமேடை ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன், ஒடுக்கப்பட்டோா் வாழ்வுரிமை இயக்க மாவட்டத் தலைவா் அழகு. தியாகராஜன், புதிய ஜனநாயக தொழிலாளா் முன்னணி மாவட்டப் பொருளாளா் ஆா். லட்சுமணன், நிா்வாகி பாபு, சந்தை சங்க நிா்வாகி வடிவேலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.