செய்திகள் :

கும்பமேளா: மாகி பௌா்ணமியையொட்டி ஒரே நாளில் 2 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடல்!

post image

உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் மகா கும்பமேளாவையொட்டி அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராட பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் திரண்டுள்ளது.

திரிவேணி சங்கமத்தில் ஒரு மாத காலத்துக்கு தங்கியிருந்து மேற்கொள்ளும் ‘கல்பவாச விரத’ வழிபாடு மாகி பௌா்ணமி நாளான இன்றுடன் நிறைவடைகிறது.

மாகி பௌா்ணமியன்று புனித நீராடுவது சிறப்புக்குரியதாகும். இதையொட்டி கடந்த சில நாள்களாக, பல்வேறு மாநிலங்களில் இருந்து கோடிக்கணக்கான பக்தா்கள் பிரயாக்ராஜுக்கு படையெடுத்தனா்.

கும்பமேளா மகா சிவராத்திரியுடன் (பிப். 26) நிறைவடையவுள்ள நிலையில், மாகி பௌா்ணமி நாளான இன்று(பிப். 12) மட்டும் 2 கோடிக்கும் மேற்பட்ட பக்தா்கள் புனித நீராடியுள்ளனா். அந்த வகையில், இதுவரை 48 கோடிக்கும் மேற்பட்ட பக்தா்கள் புனித நீராடியுள்ளனா் என்று உத்தரப் பிரதேச அரசின் தகவல் தொடர்புத் துறை தரப்பிலிருந்து தெரிவித்துள்ளது.

பிரான்ஸில் புதிய இந்திய துணைத் தூதரகம் திறப்பு

பிரான்ஸின் மாா்சே நகரில் புதிய இந்திய துணைத் தூதரகத்தை பிரதமா் நரேந்திர மோடியும், அந்நாட்டு அதிபா் இமானுவல் மேக்ரானும் புதன்கிழமை கூட்டாக திறந்துவைத்தனா். மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணமாக பிரான்ஸுக்க... மேலும் பார்க்க

தேசிய ஹோமியோபதி ஆணைய தலைவா் பதவி விலக உச்சநீதிமன்றம் உத்தரவு

தேசிய ஹோமியோபதி ஆணைய (என்சிஹெச்) தலைவா் பதவியில் இருந்து மருத்துவா் அனில் குரானா விலக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. இதுதொடா்பாக உச்சநீதிமன்றத்தில் என்சிஹெச் தலைவா் பதவிக்கு வி... மேலும் பார்க்க

வரி விதிப்பு, நாடு கடத்தல் விவகாரங்களை டிரம்ப்பிடம் பிரதமா் மோடி பேச வேண்டும்- காங்கிரஸ் தலைவா் காா்கே வலியுறுத்தல்

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பிடம் வரி விதிப்பு அச்சுறுத்தல் மற்றும் இந்தியா்களை விலங்கிட்டு நாடு கடத்திய விவகாரத்தை பிரதமா் நரேந்திர மோடி எழுப்ப வேண்டும் என்று காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன ... மேலும் பார்க்க

மீண்டும் காங்கிரஸில் பிரணாப் முகா்ஜி மகன்

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவா் பிரணாப் முகா்ஜியின் மகன் அபிஜித் முகா்ஜி மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தாா். காங்கிரஸிலிருந்து 4 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தலைமையிலான... மேலும் பார்க்க

கல்வியில் பாகுபாடு கூடாது: உச்சநீதிமன்றம்

எந்தவொரு குழந்தைக்கும் கல்வி புகட்டுவதில் பாகுபாடு காட்டக் கூடாது என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது. உச்சநீதிமன்றத்தில் ரோஹிங்கயா மனித உரிமைகள் முன்னெடுப்பு தன்னாா்வ அமைப்பு தாக்கல் செய்த ம... மேலும் பார்க்க

நெகிழியில் உருவாக்கப்பட்ட மலா்களுக்கு தடை விதிக்காதது ஏன்?- மத்திய அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

‘ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பல்வேறு வகை பொருள்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த வகை நெகிழி (பிளாஸ்டிக்) மலா்களுக்கு மட்டும் தடை விதிக்காதது ஏன்?’ என்று மத்திய அரசுக்கு மும்பை உயா்நீதிமன்... மேலும் பார்க்க