செய்திகள் :

குருப்பெயர்ச்சி பலன்கள் - 2025: சிம்மம்

post image

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

உங்களின் லாபஸ்தானத்தில் சஞ்சரிக்கத் தொடங்கும் குரு பகவானால் தடைபட்டிருந்த புதிய பொறுப்புகள் கிடைக்கும். வாழ்க்கையில் உயர்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். செய்தொழிலில் வருமானம் பல மடங்கு உயரும். மாற்றுக் கருத்துடையோரிடமும் விட்டுக்கொடுத்து நடந்துகொள்வீர்கள். இழுபறியாக நடந்துகொண்டிருந்த வழக்குகளில் சாதகமான திருப்பங்களைக் காண்பீர்கள்.

குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு தடை நீங்கி திருமணம் நடக்கும். குறைந்த முதலீட்டில் புதிய தொழில்களைத் தொடங்குவீர்கள். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டேனும் காப்பாற்றி விடுவீர்கள். வங்கிகளிடமிருந்து கடன்களைப் பெற்று புதிய அசையும், அசையாச் சொத்துக்களை வாங்குவீர்கள்.

குரு பகவானின் பார்வை உங்கள் மூன்றாம் ராசியின் மீது படிகிறது. இதனால் உங்களின் அனைத்துச் செயல்களையும் திட்டமிட்டு சரியாகச் செயல்படுத்துவீர்கள். உங்களின் தர்க்க ஞானத்தால் சண்டை சச்சரவுகளில் வெற்றி காண்பீர்கள். சகோதர சகோதரிகளுடன் இணக்கமான உறவு தொடரும். சமுதாயப் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வீர்கள். புதிய வாகனங்களை வாங்கும் யோகம் உண்டாகும். மற்றபடி உங்கள் காரியங்களை தனித்தே செய்து முடிக்கவும்.

குரு பகவானின் பார்வை உங்களின் ஐந்தாம் ராசியின் மீது விழுவதால் உங்களின் அறிவுத்திறன் வெளிப்படும். ஆன்மிக விஷயங்களில் சிறப்பான ஈடுபாடு காட்டுவீர்கள். புதிய மொழிகளை அறிந்துகொள்ள பயிற்சி வகுப்புகளில் சேர்வீர்கள். உடல் ஆரோக்யம் மேம்பட யோகா, ப்ராணாயாமம் போன்றவற்றைச் செய்வீர்கள்.

குரு பகவானின் கனிந்த பார்வை உங்களின் ஏழாம் வீட்டின் மீது படிவதால் நெடுநாட்களாக செய்யாமல் விட்டிருந்த நெடுந்தூரப் பயணங்களைச் செய்வீர்கள். சமுதாயத்தில் உங்களின் பெயரும், புகழும் உயரும். உங்களின் பேச்சுக்கு அனைவரும் மதிப்பு கொடுப்பார்கள். அவப்பெயர்களிலிருந்து விடுபடுவீர்கள். வீடு மாற்றம் செய்ய நினைப்போர் இந்தக் காலகட்டத்தில் வசதியான இல்லத்திற்கு மாறுவார்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு

பயணங்களால் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்பு ஏற்படும். மேலதிகாரிகளால் தொல்லைகள் எதுவும் ஏற்படாது. சக ஊழியர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பார்கள். பதவி உயர்வு உரிய நேரத்தில் வந்து சேரும்.

வியாபாரிகளுக்கு

போட்டிகள் குறையும். லாபம் அதிகரிக்கும். நண்பர்களையும், வாடிக்கையாளர்களையும் அனுசரித்து நடந்துகொண்டு வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். கொடுக்கல், வாங்கலில் இருந்த தொய்வுகள் நீங்கி மனதில் உற்சாகம் பெருகும். மற்றபடி புதியவர்களை நம்பிக் கடன் தர வேண்டாம்.

விவசாயிகளுக்கு

விளைச்சல் நன்றாக இருக்கும். பாசன வசதிகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். ஆனாலும் விவசாய உபகரணங்களுக்கு செலவுகளைச் செய்ய நேரிடும். மற்றபடி புதிய நிலம் குத்தகைக்கு வந்து சேரும். போட்டிக்குத் தகுந்தவாறு விலையை நிர்ணயம் செய்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு

பணியாற்றும் திறன் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் உற்சாகப்படுத்தப்படுவீர்கள். கட்சியில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்யம் நன்றாக இருக்கும். அடிக்கடி பிரயாணங்கள் செய்ய நேரிடும்.

கலைத்துறையினருக்கு

எதிர்பார்த்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்களின் பெயரும், புகழும் உயரும். ரசிகர்கள் சிறிது அலட்சியப்படுத்தினாலும் ரசிகர் மன்றங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள்.

பெண்மணிகளுக்கு

கணவரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஆடை, ஆபரணங்களை வாங்கும் யோகம் உண்டாகும். இல்லத்தில் நிம்மதி நிலவும். சுப காரியங்களில் பங்கேற்று மகிழ்வீர்கள்.

மாணவமணிகளுக்கு

நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். உங்களின் கோரிக்கைகளை அவர்கள் நிறைவேற்றுவார்கள். சக மாணவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மகம்

கட்டடக்கலை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு நன்மை கிடைக்கும். உடலைப் பற்றி தவறான எண்ணங்கள் தோன்றி மறையும்.

பூரம்

குடும்பத்தில் நல்ல சந்தோஷ தருணங்கள் ஏற்படும். சுபகாரியங்கள் வெகு லகுவாக கூடி வரும்.

விலகி நின்ற உறவுகளும் உரிய நேரத்தில் கை கொடுப்பார்கள்.

உத்திரம் - 1

புதிய வீட்டிற்கு செல்வது பற்றி முடிவெடுப்பீர்கள். பிள்ளைகள் உயர்கல்வி செல்வதற்குண்டான வேலைகளை ஆரம்பிப்பது நல்லது. கணவன் மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும்.

பரிகாரம்

அருகிலிருக்கும் பெருமாள் கோயிலுக்குச் சென்று தேங்காய் நெய் விளக்கு ஏற்றி வழிபடவும்.

குருப்பெயர்ச்சி பலன்கள் - 2025: மீனம்

2025 ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கத்தின்படி மே 11ஆம் தேதியும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி மே 14ஆம் தேதியும் பெயர்ச்சியடைகின்றது. மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி ம... மேலும் பார்க்க

குருப்பெயர்ச்சி பலன்கள் - 2025: கும்பம்

உங்களின் பூர்வ புண்ய புத்திர ஸ்தான ராசியான ஐந்தாம் இடத்தில் குரு சஞ்சரிக்கத் தொடங்குகிறார். இந்தக் காலகட்டத்தில் உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிக் கொடி நாட்டுவீர்கள். எதிர்பார்த்த புதிய பொறுப்புக... மேலும் பார்க்க

குருப்பெயர்ச்சி பலன்கள் - 2025: மகரம்

உங்களின் ஆறாம் ராசியான ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானத்தில் குரு சஞ்சரிக்கத் தொடங்குகிறார். இந்தக் காலகட்டத்தில் பொருளாதாரம் சீராக இருந்தாலும் முக்கிய செலவுகளுக்கு சிரமப்படுவீர்கள்... மேலும் பார்க்க

குருப்பெயர்ச்சி பலன்கள் - 2025: தனுசு

உங்களின் சப்தம ஸ்தானமான ஏழாம் ராசியில் சஞ்சரிக்கத் தொடங்கும் குரு பகவானின் அருளால் உங்களின் வாழ்க்கை வசதிகள் உயரும். சிலர் வசதியான வீடுகளுக்கு மாறுவார்கள். திருமணம் தடைப்பட்டவர்களுக்குத் திருமணம் நடந்... மேலும் பார்க்க

குருப்பெயர்ச்சி பலன்கள் - 2025: விருச்சிகம்

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)உங்களின் அஷ்டம ஸ்தானமான எட்டாம் ராசியில் சஞ்சரிக்கத் தொடங்கும் குரு பகவானின் அருளால் வருமானம் ஓரளவுக்கு திருப்தியாக அமையும். பழைய கடன்களுக்கு... மேலும் பார்க்க

குருப்பெயர்ச்சி பலன்கள் - 2025: துலாம்

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்உங்களின் பாக்யஸ்தானமான ஒன்பதாம் ராசியில் சஞ்சரிக்கத் தொடங்கும் குருவின் அருளால் பிள்ளைகளால் ஏற்பட்ட கவலைகள் மறையும். இல்லத்தில் திருமணம் போன... மேலும் பார்க்க