செய்திகள் :

குருப்பெயர்ச்சி பலன்கள் - 2025: துலாம்

post image

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

உங்களின் பாக்யஸ்தானமான ஒன்பதாம் ராசியில் சஞ்சரிக்கத் தொடங்கும் குருவின் அருளால் பிள்ளைகளால் ஏற்பட்ட கவலைகள் மறையும். இல்லத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். நோய் உபாதைகளிலிருந்து விடுபடுவீர்கள். முகத்திலும் உடலிலும் புதிய பொலிவு உண்டாகும். சமூகத்தில் உங்கள் புகழும் அந்தஸ்தும் உயரும். வருமானம் படிப்படியாக அதிகரிக்கும். சமூகத்தில் உயர்ந்தோரை சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். ஆன்மிகத்திலும், ஆலயத் திருப்பணிகளிலும் நம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள்.

நண்பர்களிடமும் கூட்டாளிகளிடமும் உங்கள் செல்வாக்கு உயரும். அனாவசிய பயங்களிலிருந்து விடுபடுவீர்கள். ஸ்பெகுலேஷன் மற்றும் பங்குச் சந்தைகளிலிருந்து திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். உங்களின் சொத்து மதிப்பு உயரும். மனதிற்கினிய பயணங்களை மேற்கொள்வீர்கள். யோகா, ப்ராணாயாமம் போன்றவற்றைச் செய்து உடல் நலத்தையும், மனவளத்தையும் பாதுகாத்துக்கொள்வீர்கள். வழக்கு விவகாரங்களில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். “ஓடிப் போனவனுக்கு ஒன்பதில் குரு’ என்ற பழமொழிக்கு ஏற்ப அனைத்து இடையூறுகளிலிருந்தும் கடைசி நிமிடத்தில் தப்பித்துக் கொள்வீர்கள்.

குரு உங்களின் ராசியின் மீது படிவதால் உங்களின் இரக்க குணத்தால் பிறருக்கு உதவுவீர்கள். குடும்பத்தில் அனைவரிடமும் பாசத்தோடு பழகுவீர்கள். புதிய முயற்சிகளில் தைரியத்துடன் ஈடுபடுவீர்கள். கண் உபாதைகள் தீரும். அனைத்து சூழ்நிலைகளிலும் சிறப்பான முடிவுகளை எடுப்பீர்கள். இறையருள் தொடர்ந்து கிடைக்கும். உங்களின் கோரிக்கைகள் அனைத்தும் உடனுக்குடன் நிறைவேறும்.

குரு பகவானின் பார்வை உங்களின் மூன்றாம் ராசியான தைரியஸ்தானத்தின் மீது படிகிறது. இதனால் உங்கள் கடன்களை தக்க நேரத்தில் திருப்பிச் செலுத்துவீர்கள். நேர்முக மறைமுக போட்டிகளை சாதுர்யமாக சமாளிப்பீர்கள். அபாண்டமான பழிகளிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்தவர்கள் மறுபடியும் குடும்பத்தாருடன் இணைவார்கள்.

குரு பகவானின் கனிந்த பார்வை உங்களின் பூர்வபுண்ய புத்திர ஸ்தானத்தைப் பார்வை செய்வதால் பிள்ளைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். புதிய வழிகளில் வருமானம் பெற முயற்சி செய்வீர்கள். பொதுச் சேவையில் பாராட்டுகளைப் பெறுவீர்கள். புதிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வெற்றி பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு

மேலதிகாரிகளின் ஆதரவும், சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் நன்றாக இருப்பதால் உங்களின் தோற்றத்தில் மிடுக்கு உண்டாகும். சிலர் நெடுநாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வைப் பெறுவார்கள். அலுவலக ரீதியான பயணங்களால் நன்மை உண்டாகும். உங்களின் வேலைகளை சரியாகத் திட்டமிட்டுச் செய்வீர்கள். மேலிடத்தில் நம்பிக்கைக்கு உரியவர் என்ற பெயரை சம்பாதிப்பீர்கள்.

வியாபாரிகளுக்கு

பொறுமையுடன் செயல்பட்டு வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். கூட்டாளிகளுடன் மனத்தாங்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்வீர்கள். வருமானம் சிறப்பாகவே தொடரும். புதிய முதலீடுகளில் நன்றாக சிந்தித்து செயல்படவும்.

விவசாயிகளுக்கு

மகசூல் அதிகரிக்கும். இதனால் கொள்முதல் பொருட்களை விற்று நல்ல லாபத்தைக் காண்பீர்கள். நெருங்கியவர்களுக்கு மிகப் பெரிய உதவிகளைச் செய்து பாராட்டுகளைப் பெற்று உங்கள் கௌரவத்தை உயர்த்திக்கொள்வீர்கள். உங்கள் சிந்தனையில் தெளிவும், செயலில் வீரியமும் உண்டாகும்.

அரசியல்வாதிகளுக்கு

புகழ் உயரும். புதிய பதவிகள் உங்களைத் தேடி வரும். உங்கள் கடமைகளை சுறுசுறுப்புடனும் திடமான முயற்சிகளுடனும் செய்வீர்கள். தொண்டர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள்.

கலைத்துறையினருக்கு

புகழும், பாராட்டும் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படும். மற்றபடி திட்டமிட்ட வேலைகளில் பொறுப்புடன் நடந்துகொள்வீர்கள். ரசிகர்களை அனுசரித்துச் செல்வீர்கள். மனதில் இருக்கும் வருத்தங்களை வெளியில் காட்ட மாட்டீர்கள்.

பெண்மணிகளுக்கு

குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். உற்றார், உறவினர்கள் உங்களால் பயன் பெறுவார்கள். சேமிப்பில் கவனம் செலுத்துவீர்கள். உங்கள் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

மாணவமணிகளுக்கு

நினைவாற்றல் அதிகரிக்கும். தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள்.

சித்திரை - 3, 4

வாகனங்கள், மற்றும் இயந்திரங்களை பிரயோகப்படுத்தும் போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு பகீரதப் பிரயத்தனம் செய்வதன் மூலமாகவே நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

ஸ்வாதி

சிறிது முயற்சி செய்வதன் மூலம் சிறந்த வாய்ப்புகள் கைகூடும். மேலும் உங்கள் கௌரவம் அதிகரிக்கும்.

விசாகம் - 1, 2, 3

புத்துணர்ச்சியுடன் எதையும் எதிர் கொள்வீர். நல்ல உடல் ஆரோக்கியமும் மன ஆரோக்கியமும் இருக்கும். நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனைகளையும் மிகச் சாதுர்யமாக கையாளுவீர்கள்.

பரிகாரம்

செவ்வாய்தோறும் அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்குச் சென்று வலம் வந்து வணங்கி வரவும். நல்லெண்ணெய் விளக்கு ஏற்றலாம்.

குருப்பெயர்ச்சி பலன்கள் - 2025: மீனம்

2025 ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கத்தின்படி மே 11ஆம் தேதியும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி மே 14ஆம் தேதியும் பெயர்ச்சியடைகின்றது. மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி ம... மேலும் பார்க்க

குருப்பெயர்ச்சி பலன்கள் - 2025: கும்பம்

உங்களின் பூர்வ புண்ய புத்திர ஸ்தான ராசியான ஐந்தாம் இடத்தில் குரு சஞ்சரிக்கத் தொடங்குகிறார். இந்தக் காலகட்டத்தில் உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றிக் கொடி நாட்டுவீர்கள். எதிர்பார்த்த புதிய பொறுப்புக... மேலும் பார்க்க

குருப்பெயர்ச்சி பலன்கள் - 2025: மகரம்

உங்களின் ஆறாம் ராசியான ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானத்தில் குரு சஞ்சரிக்கத் தொடங்குகிறார். இந்தக் காலகட்டத்தில் பொருளாதாரம் சீராக இருந்தாலும் முக்கிய செலவுகளுக்கு சிரமப்படுவீர்கள்... மேலும் பார்க்க

குருப்பெயர்ச்சி பலன்கள் - 2025: தனுசு

உங்களின் சப்தம ஸ்தானமான ஏழாம் ராசியில் சஞ்சரிக்கத் தொடங்கும் குரு பகவானின் அருளால் உங்களின் வாழ்க்கை வசதிகள் உயரும். சிலர் வசதியான வீடுகளுக்கு மாறுவார்கள். திருமணம் தடைப்பட்டவர்களுக்குத் திருமணம் நடந்... மேலும் பார்க்க

குருப்பெயர்ச்சி பலன்கள் - 2025: விருச்சிகம்

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)உங்களின் அஷ்டம ஸ்தானமான எட்டாம் ராசியில் சஞ்சரிக்கத் தொடங்கும் குரு பகவானின் அருளால் வருமானம் ஓரளவுக்கு திருப்தியாக அமையும். பழைய கடன்களுக்கு... மேலும் பார்க்க

குருப்பெயர்ச்சி பலன்கள் - 2025: கன்னி

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)உங்களின் தொழில் ஸ்தானமான பத்தாம் ராசியில் சஞ்சரிக்கத் தொடங்கும் குரு பகவான், உங்களின் தலைமையை அனைவரும் ஏற்றுக்கொள்ளச் செய்வார். செல்வ... மேலும் பார்க்க