குருப்பெயர்ச்சி பலன்கள் - 2025: விருச்சிகம்
விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
உங்களின் அஷ்டம ஸ்தானமான எட்டாம் ராசியில் சஞ்சரிக்கத் தொடங்கும் குரு பகவானின் அருளால் வருமானம் ஓரளவுக்கு திருப்தியாக அமையும். பழைய கடன்களுக்கு வட்டிகளைச் செலுத்துவீர்கள். பெரிய கடன்கள் ஏதும் ஏற்படாது. செய்தொழிலில் புதிய மாற்றங்களைச் செய்ய நேரிடும். பெற்றோர் வழியில் சிறிது மருத்துவச் செலவுகளைச் சந்திக்கலாம். மற்றபடி உங்களின் உடல் ஆரோக்யம் சிறப்பாகவே இருக்கும். உங்கள் வேலைகளை சரியாகத் திட்டமிட்டு செய்வீர்கள். வருமானம் தரக்கூடிய பயணங்களை மட்டுமே மேற்கொள்வீர்கள்.
அதேசமயம் மன அழுத்தம் ஏற்படும். எந்த அனாவசியப் பிரச்னைகளிலும் சிக்கிக் கொள்ள வேண்டாம். வழக்கு விவகாரங்கள் இந்தக் காலகட்டத்தில் முடிவுக்கு வராது. எவரிடமும் கடினமான வார்த்தைகளை உதிர்க்க வேண்டாம். குழப்பமான விஷயங்களிலிருந்து தள்ளி இருக்கவும். மேலும் ஸ்பெகுலேஷன் துறைகளிலும் அதிகமாக ஈடுபட வேண்டாம். மற்றபடி உங்கள் தேவைகளை எப்பாடுபட்டாவது பூர்த்தி செய்துவிடுவீர்கள்.
குரு பகவானின் பார்வை உங்கள் அயனஸ்தானமான பன்னிரண்டாம் ராசியின் மீது படிகிறது. இதனால் செலவுகளை ஈடுகட்டும் வகையில் வருமானம் வந்துகொண்டிருக்கும். அலைச்சலும், டென்ஷனும் கட்டுக்குள் இருக்கும். உங்கள் கடமைகளை முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.
குரு பகவானின் பார்வை உங்களின் குடும்ப ஸ்தானத்தின் மீது படிகிறது. இதனால் சேமிப்பு விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். பழைய முதலீடுகளில் வருமானம் அதிகரிக்கும். உங்கள் பேச்சில் நிதானமும், பொறுமையும் இருக்கும். உங்களின் எண்ணங்கள் கச்சிதமாக செயல்வடிவம் பெறும்.
குரு பகவானின் பார்வை உங்களின் சுகஸ்தானத்தின் மீது படிவதால் உற்றார், உறவினர்கள் உங்களிடம் சுமுகமாகப் பழகுவார்கள். உடல் உபாதைகள் பெரிதாக ஏற்படாது. தாயின் பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும்.
உத்தியோகஸ்தர்களுக்கு
வேலைப் பளு அதிகரித்தாலும் உங்களின் வேலைகளை செவ்வனே செய்து முடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். சக ஊழியர்கள் உங்களுக்கு நேசக்கரம் நீட்டுவார்கள். பயணங்களால் அனுகூலமான திருப்பங்கள் ஏற்படாது. என்றாலும் கொடுக்கப்பட்ட வேலைகள் நன்றாகவே முடிவடையும். அலுவலகத்தில் உங்கள் கெளரவத்திற்கு எந்தக் குறையும் ஏற்படாது.
வியாபரிகளுக்கு
நல்ல லாபம் கிடைக்கும். மனதில் குதூகலம் நிறையும். புதிய முதலீடுகளால் பயன் பெறுவீர்கள். கூட்டாளிகள் உங்களிடம் சுமுகமாக நடந்துகொள்வார்கள். உங்களின் பேச்சுக்கு நல்ல மதிப்பு கிடைக்கும்.
விவசாயிகளுக்கு
விளை பொருட்களால் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். நீர்ப்பாசன வசதிகளை மேற்கொள்ள எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கும். புதிய குத்தகைகள் உங்களை நாடி வந்தாலும் அவற்றைத் தவிர்க்கவும். வயல், வரப்பு சண்டைகளில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.
அரசியல்வாதிகளுக்கு
பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். கட்சி மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். இதனால் புதிய பதவிகள் உங்களைத் தேடி வரும். எதிரிகளால் தொல்லைகள் ஏற்படாது.
கலைத்துறையினருக்கு
விழிப்புடன் செயல்பட்டு ஒப்பந்தங்களை நிறைவேற்றுவீர்கள். தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள். யோகா, ப்ராணாயாமம் போன்றவற்றைச் செய்து உடலையும் மனதையும் சிறப்பாக வைத்துக் கொள்வீர்கள். சக கலைஞர்களை பக்குவமாக சமாளிக்கவும்.
பெண்மணிகளுக்கு
குடும்பத்தில் ஒற்றுமையைக் காண்பீர்கள். பெற்றோரின் ஆதரவினால் தனலாபம் அடைவீர்கள். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும்.
மாணவமணிகளுக்கு
கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். பெற்றோர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள். திட்டமிட்டு பதற்றப்படாமல் படித்து வெற்றி காண்பீர்கள். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் இருந்தால் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.
விசாகம்
உங்களது யோசனைகளை மற்றவர்கள் கேட்டும் அனுசரித்தும் செல்வார்கள். உங்களை உதாசீனப்படுத்தியவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள். எதையும் ஆலோசனை செய்து முடிவெடுங்கள்.
அனுஷம்
தெய்வ நம்பிக்கைகளிலும் சடங்குகள் சமிபிரதாயங்களில் நாட்டம் அதிகரிக்கும். உங்களின் செயல்பாட்டினால் உங்கள் குடும்பத்திற்கு நன்மை ஏற்படும்.
கேட்டை
நிலம், வீடு, மனை ஆகியவற்றில் இருந்த சிக்கல்கள் விலகி நன்மையுண்டாகும். குடியிருக்கும் வீட்டினை மாற்றவும் சிலருக்கு வாய்ப்புண்டு. பணவரவில் ஓட்டம் இருக்கும்.
பரிகாரம்
வியாழன்தோறும் அருகிலிருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று ஸ்ரீகுருபகவானை வணங்கி வரவும். தினமும் முன்னோர்களை வணங்கவும்.