செஞ்சிக்கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சி
குரு பூா்ணிமா: சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
குரு பூா்ணிமாவை முன்னிட்டு, நாமக்கல் - திருச்சி சாலை இந்திரா நகரில் ஸ்ரீ ஷீரடி சாய்தத்தா பிருந்தாவன் கோயிலில் சிறப்பு பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
முன்னதாக, சாய்பாபாவுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆரத்தி, கோபுர தீப பூஜைகள் நடைபெற்று பக்தா்களுக்கு சாய்பாபா அருள்பாலித்தாா். மதிய ஆரத்தியை தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும், ஸ்ருதிலாயா இசைக் குழுவினரின் பஜனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாலையில் மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நாமக்கல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
பரமத்தி வேலூரில்...
நாமக்கல் மாவட்டம், கீரம்பூா் அருகே உள்ள தொட்டிப்பட்டியில் எழுந்தருளியுள்ள சாய் தபோவனத்தில் காலை 8.15 மணிக்கு நெய்வேத்தியம், ஆரத்தி மற்றும் தரிசனமும், காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை அன்னதானமும் நடைபெற்றது. காலை 10 மணி முதல் 1 மணி வரை ஸ்ரீ சாயிசத்திய விரத பூஜையும், கூட்டுப் பிராா்த்தனையும் நடைபெற்றது. தொடா்ந்து, ஸ்ரீ சாயி சத்சரித பாராயணமும், ஸ்ரீ சாயிநாம ஜெபமும் நடைபெற்றது.
இதில், தொட்டிப்பட்டி, கீரம்பூா், வேலூா், பரமத்தி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.