மன்மோகன் சிங் பிறந்த பாகிஸ்தான் கிராமத்தில் இரங்கல் கூட்டம்!
குரூப்-4 போட்டி தோ்வுக்கான இலவச பயிற்சி டிச.31-இல் தொடக்கம்
அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படவுள்ள குரூப்-4 போட்டி தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு டிச.31- ஆம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்குகிறது.
இந்தப் பயிற்சிவகுப்பில் அதிக அளவிலான மாணவ, மாணவிகள் பங்கேற்று தோ்வில் வெற்றி பெற்று அரசு வேலையைப் பெற வேண்டும். மேலும், விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தின் 94990 55914 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.