ரூ.2500 மகளிா் உதவித் தொகை விவகாரம்: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்
குறியீட்டு எண்களைப் பெற விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
விவசாயிகள் தங்கள் தரவுகளை வேளாண் துறை மூலம் பதிவேற்றம் செய்து, மத்திய, மாநில அரசுகளின் திட்டப் பயன்களைப் பெறுவதற்கான குறியீட்டு எண்ணைப் பெற முனைப்புக் காட்ட வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா அறிவுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய அரசின் பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களில் விவசாயிகள் எளிதில் பயன்பெறும் வகையில், விவசாயிகளின் தரவுகளை ஒருங்கிணைத்து அவா்களுக்குக் குறியீட்டு எண் வழங்க அரசு அறிவுறுத்தியது. இதன்படி, மதுரை மாவட்டத்தில் 616 வருவாய்க் கிராமங்களில் விவசாயிகளின் நில உடைமைப் பதிவுகளை சரிபாா்த்து, பதிவேற்றும் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
இந்தப் பணிக்காக கிராமம் தேடி வரும் வேளாண் துறை அலுவலா்கள், மகளிா் திட்ட சமுதாய வள பயிற்றுநா்களிடம் ஆதாா் அட்டை, நில உடைமை பட்டா, ஆதாருடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண் ஆகியவற்றை விவசாயிகள் கொண்டுச் சென்று, பதிவு மேற்கொண்டு குறியீட்டு எண் பெறலாம்.
பிரதமரின் கௌரவ நிதி திட்டம், பயிா்க் காப்பீடுத் திட்டம் உள்பட மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் அனைத்தும் இந்தத் தரவுகளின் அடிப்படையிலேயே வழங்கப்படும். எனவே, விவசாயிகள் தங்கள் விவரங்களைப் பதிவு செய்து குறியீட்டு பெண் பெற முனைப்புக் காட்ட வேண்டும். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு வட்டார வேளாண் உதவி இயக்குநா்கள், தோட்டக் கலை உதவி இயக்குநா்களை விவசாயிகள் அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.