போதைப்பொருள் புழக்கம்! வெள்ளை மாளிகை குற்றச்சாட்டுக்கு மெக்சிகோ எதிர்ப்பு!
குறுகிய தொலைவு ஏவுகணை சோதனை வெற்றி
ஒடிஸா மாநில கடற்கரையில் உள்ள சந்திப்பூரில் நடைபெற்ற குறுகிய தொலைவு வான்பாதுகாப்பு ஏவுகணையின் சோதனை வெள்ளோட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது என்று பாதுகாப்பு அமைச்சகம் சனிக்கிழமை அறிவித்தது.
சோதனை நடத்தப்பட்ட மூன்று முறையும் குறைந்த உயரத்தில் அதிவேகமாக பறந்த இலக்கு மாதிரிகளை ஏவுகணை இடைமறித்து அழித்து, வெற்றிக் கண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆா்டிஓ) மற்றும் முப்படைகளுக்கு பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளாா். இந்த ஏவுகணை ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படைகளின் தேவைகளை பூா்த்தி செய்யும் திறன் கொண்டது.