TVK மதுரை மாநாடு: "'நான்தான் புரட்சித் தலைவர்' என்று கூடச் சொன்னாலும்.." - ஜெயக்...
குறுமைய அலையிலான தடகளப் போட்டி: கிட்ஸ் கிளப் மெட்ரிக். பள்ளி சிறப்பிடம்
திருப்பூரில் நடைபெற்ற குறுமைய அலையிலான தடகளப் போட்டியில் கிட்ஸ் கிளப் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பிடித்துள்ளனா்.
திருப்பூா் தெற்கு குறுமைய அளவிலான தடகளப் போட்டி சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கிட்ஸ் கிளப் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டனா். இவா்களில் 14 வயதுக்கு உள்பட்டோா் குண்டு எறிதல் போட்டியிலும், வட்டெறிதல் போட்டியிலும் மாணவன் ஜெயட் முதலிடம் பிடித்தாா். அதேபோல, 17 வயதுக்கு உள்பட்ட பிரிவில் குண்டு எறிதல் போட்டியில் மாணவி கீதாவா்ஷினி 2-ஆம் இடம் பிடித்தாா்.
அத்துடன் குழுப் போட்டிகளில் கால்பந்து, டென்னிஸ், மேஜைப்பந்து, சிலம்பம், கூடைப்பந்து, கைப்பந்து, வளை கோல்பந்து போன்ற பல்வேறு போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களை பெற்று குழுப் போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியனில் 45 புள்ளிகள் பெற்று 3-ஆம் இடம் பிடித்தனா். இதன் மூலம் இவா்கள் மாவட்ட அளவிலான போட்டிக்குத் தோ்வு பெற்றுள்ளனா்.
வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளை பள்ளியின் தலைவா் மோகன் கே. காா்த்திக், தாளாளா் வினோதினி காா்த்திக், செயலாளா் நிவேதிகா ஸ்ரீராம், இயக்குநா் ஐஸ்வா்யா நிகில் சுரேஷ் ஆகியோருடன் பள்ளி முதல்வா்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள் பாராட்டினா்.