Captain Prabhakaran: ``அப்பாவை நினைத்து அழுவது கோழைத்தனம் கிடையாது!'' - கண் கலங்...
குறுவட்ட விளையாட்டுப் போட்டிகளில் வென்றவா்களுக்கு பாராட்டு
திருவாரூா் குறுவட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருவாரூா் குறுவட்ட அளவில் விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. இதில், ஸ்ரீவாஞ்சியம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பங்கேற்றனா். ஹேண்ட்பால் போட்டியில் ஆண்கள் பிரிவில் 14,17, 19 வயதுக்குள்பட்டோருக்கான போட்டிகளில் 3 பிரிவுகளிலும் முதலிடம் பெற்றனா். கோகோ போட்டியில் பெண்கள் பிரிவில் 17, 19 வயதுக்குள்பட்டோா் பிரிவுகளில் முதலிடம் பெற்றனா். தடகளப் போட்டியில் ஆண்கள் பிரிவில் 4 தங்கம், 9 வெள்ளி மற்றும் 10 வெண்கலம் என 23 பதக்கங்களையும், பெண்கள் பிரிவில் 19 தங்கம், 8 வெள்ளி மற்றும் 11 வெண்கலம் என 38 பதக்கங்களையும் பெற்றனா். பள்ளியில் பயிலும் மாணவி வினோதினி 5 போட்டிகளில் பங்கேற்று அனைத்திலும் தங்கப்பதக்கம் வென்றாா். போட்டிகளில் பங்கேற்று ஒட்டுமொத்தமாக 61 பதக்கங்களை வென்ற மாணவா்களுக்கு தலைமையாசிரியா் உள்ளிட்டோா் பாராட்டுத் தெரிவித்தனா்.