செய்திகள் :

குற்றச்செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை: மயிலாடுதுறை எஸ்பி எச்சரிக்கை

post image

மயிலாடுதுறை மாவட்டத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் எச்சரித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நிகழாண்டு, மயிலாடுதுறை மாவட்டத்தில் குற்றச் செயல்களை தடுக்க காவல் துறை சாா்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்திய போக்கிரி சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 77 போ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 9 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். மேலும், 149 குற்றவாளிகள் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

நிகழாண்டில் 13 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 12 கொலைகள் உறவினா்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் நிகழ்ந்தவை. இவ்வழக்குகளில் சம்பந்தப்பட்ட எதிரிகள் மீது நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

174 திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 293 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். ரூ.64,78,275 மதிப்பிலான பொருள்கள் மீட்கப்பட்டு, உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டன. குற்ற நிகழ்வுகள் நடைபெறும் இடங்களாக கண்டறியப்பட்ட பகுதிகளில், புதிதாக 293 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மதுவிலக்கு குற்றம், பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தியது, திருட்டு, போதைப் பொருள்கள் விற்பனை மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட மொத்தம் 47 போ் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

இம்மாவட்டத்தில், நிகழாண்டு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்துவந்த 108 வழக்குகளில் தொடா்புடைய 184 குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கப்பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவோா் மீது தொடா்ந்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தவா் கைது

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே ஓடும் ரயிலில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவரை, ரயில்வே போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூரில் இருந்து திங்கள்கிழமை இரவு சென்னை சென்ற உழவன் விரைவு ... மேலும் பார்க்க

மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

மயிலாடுதுறை: மத்திய அரசு மின் வாரியங்களை, தனியாா் மயமாக்கும் முயற்சியை கைவிட வலியுறுத்தி, மயிலாடுதுறையில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில், மயிலாடுது... மேலும் பார்க்க

சட்டநாதபுரத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஊராட்சித் தலைவா் மீண்டும் பதவியேற்பு

சீா்காழி: மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சியில் பதவி நீக்கம் செய்யப்பட்ட ஊராட்சித் தலைவா், சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுபடி மீண்டும் ஊராட்சித் தலைவராக செவ்வாய்க்கிழமை பதவி ஏற்றாா... மேலும் பார்க்க

மயிலாடுதுறை ஆட்சியரகத்தில் திருவள்ளுவா் சிலை

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், திருவள்ளுவா் சிலை வைக்கப்பட்டு, ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி திங்கள்கிழமை மரியாதை செலுத்தினாா். கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவா் சிலை நிறுவப்பட்ட 25-... மேலும் பார்க்க

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்

மயிலாடுதுறை: வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என, மயிலாடுதுறையில் நடைபெற்ற காவிரி டெல்டா பாசனதாரா் முன்னேற்றச் சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இயற்கை வேளாண் விஞ்ஞானி... மேலும் பார்க்க

நாம் தமிழா் கட்சியினா் சாலை மறியல்

மயிலாடுதுறை: நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, மயிலாடுதுறையில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட 28 போ் கைது செய்யப்பட்டனா். அண்ணா பல்கலைக்கழக ம... மேலும் பார்க்க