குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி
குற்றாலம் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை செவ்வாய்க்கிழமை நீக்கப்பட்டதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.
குற்றாலம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவுமுதல் பெய்த தொடா்மழை காரணமாக பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் சனிக்கிழமைமுதல் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
அருவிகளில் தண்ணீா்வரத்து செவ்வாய்க்கிழமை சீரானதால், அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். மூன்று தினங்களுக்குப் பிறகு அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.