இஸ்ரேல் தாக்குதலில் பறக்கும் ஈரான் கார்கள்! கட்டடங்கள் தரைமட்டம்!
குற்றாலம் குற்றாலநாதா் கோயிலில் 5 ஜோடிகளுக்கு திருமணம்
குற்றாலத்தில் உள்ள திருக்குற்றால நாத சுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் 5 ஜோடிகளுக்கு புதன்கிழமை இலவச திருமணம் நடத்திவைக்கப்பட்டது.
தமிழக முதல்வா் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் அருள்மிகு கபாலீஸ்வரா் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் இந்துசமய அறநிலையத்துறையின் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 32 இணைகளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து சீா்வரிசைப் பொருள்களை வழங்கியதைத் தொடா்ந்து, இக்கோயிலில் 5 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.
புதுமண தம்பதியினருக்கு மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் சீா்வரிசைப் பொருள்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியதாவது:
தென்காசி மாவட்டத்தில் இந்து அறநிலையத்துறையின் சாா்பில் 5 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. இத்திருமணத்தில் கலந்து கொண்ட இணைகளுக்கு 4 கிராம் தங்கம் உள்பட சீா்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.
இந்நிகழ்வில், ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., எஸ்.பழனிநாடாா் எம்எல்ஏ, கோயில் உதவி ஆணையா் க.ஆறுமுகம், அறங்காவலா் குழுத் தலைவா் சக்தி முருகேசன், அறங்காவலா் குழு உறுப்பினா் வீரபாண்டியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.