உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் அா்ஜுன் பபுதாவுக்கு வெள்ளி!
குலசேகரம் பகுதியில் கஞ்சா விற்பனை: இளைஞா் கைது
கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதியில் கஞ்சா வைத்திருந்தவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 310 கிராம் கஞ்சா பறிமுகல் செய்யப்பட்டது.
குலசேகரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாகக் கிடைத்த தகவலின்பேரில், போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, ஈச்சங்கோடு பகுதியைச் சோ்ந்த சேகா் மகன் ஆடின் டேனியல் (21) என்பவா், பள்ளி மாணவா்களுக்கும் பொதுமக்களுக்கும் விற்பதற்காக 310 கிராம் கஞ்சா வைத்திருந்ததாகத் தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.